9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நிலவரம்: வெற்றி முகத்தில் அதிமுக! தில்லுமுல்லு செய்து வெற்றியை பறிக்க துடிக்கும் திமுக!!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நிலவரம்: வெற்றி முகத்தில் அதிமுக! தில்லுமுல்லு செய்து வெற்றியை பறிக்க துடிக்கும் திமுக!!

சென்னை,அக்09;: தமிழ்நாட்டில் 9 மாவட்ட உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. விடியா திமுக அரசின் அதிகாரிகள், திமுகவினர் செய்யும் தில்லுமுல்லு களால் மட்டுமே திமுக வெற்றி பெற முடியும்
.
9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்- களத்தில் 82 ஆயிரம் பேர்:

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் 28 மாவட்டங்களில் தற்செயல் ( இடைத்தேர்தல்) தேர்தல்கள் கடந்த 6 ஆம் தேதி மற்றும் இன்று 9 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 27,002 பதவி இடங்களுக்கு 98,151 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.மேலும்28 மாவட்டங்களுக்கான இடைத்தேர்தலில் 789 பதவிகளுக்கு 2,547 பேர் மனு தாக்கல் செய்தனர். மொத்தம் உள்ள 27,791 பதவிகளுக்கு ஒரு லட்சத்து 698 பேர் மனுதாக்கல் செய்தனர்.இதில் 1246  வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன 15,287 வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை திரும்ப பெற்றனர்.இதை அடுத்து இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 3346 வேட்பாளர்கள் போட்டி யின்றி தேர்வு செய்யப்பட்டனர் .அதன்படி தற்போது களத்தில் 80,819 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.9 மாவட்டங்களில் உள்ள 39 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும்,755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கும்,1577 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்களுக்கும் 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதிவுகளுக்கும் இன்று இறுதிகட்ட தேர்தல் நடைபெறுகிறது.

7 முனை போட்டி

இந்த தேர்தலில் அதிமுக ,திமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.பா.ம. க.,மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி,அமமுக தேமுதிக ஆகிய கட்சிகள் தனித்தும்,சுயேட்சை வேட்பாளர்களும்  போட்டி யிடுகின்றன.இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 7 முனை போட்டி நிலவுகிறது . 7 முனை போட்டி நிலவினாலும் அதிமுக - திமுக இடையே தான் போட்டி நிலவுகிறது.

அதிமுகவினர் தீவிர பிரச்சாரம்

அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர் செல்வம்,எடப்பாடி யார் , கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி,,முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி,
தங்கமணி,வீரமணி,ஆர்.பி.உதயகுமார் ,எம்.ஆர்.விஜய பாஸ்கர்,சி.விஜய பாஸ்கர்,கடம்பூர் ராஜூ ,செல்லூர் ராஜூ, வளர்மதி,கோகுல இந்திரா, சோமசுந்தரம்,கே.ஏ.செங்கோட்டையன்,சேவூர் ராமச்சந்திரன், ஓ.எஸ்.மணியன்,ஆர்.காமராஜ் ,ராஜலட்சுமி,மற்றும் மனோஜ் பாண்டியன், தச் சை  கணேஷ் ராஜா,கிருஷ்ண முரளி குட்டி யப்பா மற்றும் கழக நிர்வாகிகள் ,முன்னணியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அவர்கள் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும் ,விடியல் அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் பற்றியும் அதை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவது பற்றியும்  விளக்கி கூறி வாக்கு சேகரித்தனர்

அதிமுக வெற்றி உறுதி

.தமிழகம் முழுவதும் தற்போது நிலவும் குடி நீர் தட்டுப்பாடு, மின் தடை ,புழு பூத்த பழுத்த உபயோகமற்ற ரேசன் அரிசி விநியோகம், நீட் தேர்வு,நகை கடன் தள்ளுபடியில் குழப்பங்கள் ஆகியவற்றால் விடியல் அரசு மீது மக்களின் எதிர்ப்பு அலை வீசுகிறது.அதிமுகவினரின்  ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சார யுக்தியால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

மக்கள் எதிர்ப்பு - திமுக பிரச்சாரம் கட்

மக்களின்  எதிர்ப்பு அலை காரணத்தால்  திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் ,அவரது மகன் உதயநிதி,மற்றும் திமுக அமைச்சர்கள் முன்னணி நிர்வாகிகள்,காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் என யாரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கி விட்டனர்.

குறுக்கு வழியில் வெற்றியை பெற துடிக்கும் திமுக

ஆனால் குறுக்கு வழிகளை கையாண்டு  எப்படியாவது வெற்றியை கைப்பற்ற திமுக முடிவு செய்துள்ளது.அதற்காக அரசு அதிகாரிகளை பயன்படுத்தி ,தில்லுமுல்லு செய்தும், கலவரத்தை உருவாக்கியும் செயற்கை வெற்றியை பெற முயற்சி செய்து வருகிறது.தற்போது நிலவரப்படி அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது.

31 ஆண்டுகள் ஆண்ட அதிமுகாவால் மட்டுமே மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்பது உறுதியாகி விட்டது.