மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இன்றி இயங்கும் கோழிப் பண்ணைகள் செயல்பட தடை! நீதிமன்ற உத்தரவால் ஆபத்தில் கோழி பண்ணைகள் ?

மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இன்றி இயங்கும் கோழிப் பண்ணைகள் செயல்பட தடை! நீதிமன்ற உத்தரவால் ஆபத்தில் கோழி பண்ணைகள் ?

கோவையில் தயாராகும் கோழி பண்ணை உபகரணங்கள்! ஜி.எஸ்.டி.,க்கு முன்...  ஜி.எஸ்.டி.,க்கு பின்... | Dinamalar Tamil News

ஈரோடு,அக்09;  மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இன்றி இயங்கும் கோழிப் பண்ணைகள் செயல்பட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.இந்த உத்தரவால் தமிழ்நாட்டில் கோழிப் பண்ணைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என தெரிகிறது.

பொதுமக்கள் எதிர்ப்பு

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்கா பெரிய வீரசங்கிலி கிராமத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் கோழிப்பண்ணையில் ஈக்கள் பெரும் அளவில் உற்பத்தியாகிறது இதனால் இப்பகுதியில் பொதுமக்கள் வாழவே சிரமப்படுகிறோம்  என அப்பகுதி பொதுமக்கள் தரப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.. இப் புகார்  பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு   தீர்வு கிடைக்காததால் பொதுமக்கள் தரப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

தற்காலிக தடை

இந்நிலையில் அப்போதைய  ஈரோடு வருவாய் கோட்டாச்சியர் சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணைய ஆய்வுசெய்து கோழிப்பண்ணைக்கு தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்தார். எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து கோழிப்பண்ணை சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது இவ்வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருந்த நிலையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை  கோழிப்பண்ணை நிர்வாகம் பல்வேறுகாரணங்களுக்காக வாபஸ் பெற்று மீண்டும் ஜூலை மாதம் ஈரோடு வருவாய் கோட்டாச்சியர் இடம் மனு கொடுத்து கோழிப் பண்ணையை தொடர்ந்து நடத்த அனுமதி கோரியது. அந்த விசாரணை நிலுவையில் உள்ளதாகவும் அறியப்படுகிறது

கோழி பண்ணைகள் இயங்க தடை

இந்நிலையில் கோழிப்பண்ணை உரிய கட்டிட அனுமதி இன்றி நடந்து வருவதாக பொதுநல வழக்கு இறுதிகட்டத்தை எட்டியது இதையடுத்து கடந்த  4/10/21 தேதி அன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு மாசுகட்டுப்பாட்டு துறையின் முறையான அனுமதியை பெறாமல் இயங்கி வந்த இந்த கோழிப்பண்ணையை தடை செய்வதாக அறிவித்தார்

இடமாற்றம் செய்ய முயற்சி

 இதனால் கோழிப்பண்ணை நிர்வாகம் பண்ணையை இடமாற்றம் செய்யும் வேலையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது

கோழிப்பண்ணை களுக் கு ஆபத்து?

மேலும் இது பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்யப்பட்டதால்  உயர்நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த இந்த ஆணை இந்த கோழிப்பண்ணைக்கு மட்டும் தானா? அல்லது முறையான அனுமதி பெறாமல் இயங்கிவரும் அனைத்து கோழிப் பண்ணைகளுக்கும் இந்த ஆணை பொருந்துமா ? என்பது தெரியவில்லை. அதுபோல் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் முறையான அனுமதி வாங்காமல் இயங்கி வரும் அனைத்து கோழிப்பண்ணைக களுக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும் என்பதே சட்ட வல்லுநர்கள் கருத்து. மேலும் இப்போது மாவட்டத்தில் இயங்கிவரும் பண்ணைகளில் மழைநீர் வடிகால் என்பது சரியான முறையில் பராமரிக்கப் படுகிறதா?,கோழிப்பண்ணையில் சேகரிக்கப்படும் கோழிக்கழிவுகள் சரியான அளவு கான்ங்ரீட் தளம் அமைத்து சேகரிகப்படுகிறதா,? மேலும் முறையான அனுமதி பெறாமல் இயங்கிவரும் கோழிப்பண்ணைகளை கணக்கெடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தடைசெய்வார்களா? என்பதே  பொதுமக்கள் முன் உள்ளமில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.