ஸ்டேஷன்களில் கைதிகள் சித்ரவதை; தலைமை நீதிபதி வேதனை !

ஸ்டேஷன்களில் கைதிகள் சித்ரவதை; தலைமை நீதிபதி வேதனை !

latest tamil news

புதுடில்லி, ஆக9, ''நம் நாட்டில் இன்றும் போலீஸ் ஸ்டேஷன்களில் கைதிகளை சித்ரவதை செய்வது தொடர்கிறது,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வேதனை தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சட்ட உதவிக்கான 'மொபைல் ஆப்' சேவையை துவக்கி வைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவத,

இந்த சமூகம் சட்டத்தால் நிர்வாகம் செய்யப்படுகிறது. சலுகை பெற்றவர்களுக்கும், சாதாரண குடிமக்களும் நீதியை பெறுவதில் உள்ள இடைவெளியை குறைக்க வேண்டியது மிகவும் அவசியம். நாட்டு மக்கள் அனைவரும் எந்த தடையும் இன்றி அணுகி நீதியை பெறும் சூழலை உருவாக்க வேண்டும்.

குடிமக்களின் நம்பிக்கையை பெறவே நீதித்துறை விரும்புகிறது. நம் கடந்த காலம், எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடாது. தேசிய சட்டப் பணிகள் ஆணையம் சமூகத்தின் அடித்தட்டு மக்களும் நீதியை பெற உதவ வேண்டும். இந்த மொபைல் ஆப் வாயிலாக ஏழைகளும் சட்ட உதவி பெற உதவ வேண்டும்.

போலீஸ் ஸ்டேஷன்களில் மனித உரிமைகளுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. போலீஸ் காவலில் இருக்கும் கைதிகள் கடுமையாக சித்ரவதை செய்யப்படுவது இன்றும் தொடருகிறது என்பது வேதனையானது.

latest tamil news

அரசியல் அமைப்பு சட்டம், மனித உரிமை எல்லாம் இருந்தும் சரியான சட்ட உதவி இல்லாததால் கொடுமை நடக்கிறது. விழிப்புணர்வு'தேர்ட் டிகிரி ட்ரீட்மென்ட்' எனப்படும் சித்ரவதை நடப்பது மிகவும் கொடுமை. மனித உரிமை மற்றும் அரசியலமைப்புச் சட்டம் ஆகியவை குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு தேசிய சட்டப் பணிகள் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.