தி.மு.க., தலைவர்கள் மீது வழக்குகள் பாயும் ?

தி.மு.க., தலைவர்கள் மீது வழக்குகள் பாயும் ?

latest tamil news

புதுடில்லி,ஆக9, அ.தி.மு.க., தலைவர்கள் மீது வழக்குகள் போடவும், பழைய வழக்குகளை துாசி தட்டவும் தி.மு.க., அரசு தயாராகி விட்டது. இதை வைத்து சில அ.தி.மு.க., தலைவர்களை தன் பக்கம் இழுக்கவும், தி.மு.க., பேரம் பேசுவதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க, தலைமை சமீபத்தில் மோடியைச் சந்தித்தது. இந்த சந்திப்பிற்கு பின் நிதி அமைச்சகம் பரபரப்பாகியுள்ளது. வருமான வரித் துறை அதிகாரிகள் அதற்கான வேலையில் இறங்கி விட்டனர். தி.மு.க., தலைவர்கள் மீதுள்ள வழக்குகளின் கோப்புகள் அனைத்தையும் அலசி வருகின்றனர்.

latest tamil news

அவர்களது சொத்து விபரங்கள் குறித்து தீவிர ஆய்வுகள் நடக்கின்றன. இதில் சிலருக்கு வெளிநாடுகளிலும் சொத்து உள்ளது தெரியவந்துள்ளது. விரைவில், தி.மு.க., தலைவர்கள் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை நடக்கலாம். ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகள் இனிமேல் துரிதப்படுத்தப்படும் என்கின்றனர் அதிகாரிகள்.