14ம் தேதி நள்ளிரவு மேல்சபை அறிவிப்பு ?

14ம் தேதி நள்ளிரவு மேல்சபை அறிவிப்பு ?

latest tamil news

சென்னை,ஆக 09, நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி, வரும் 14ம் தேதி நள்ளிரவில், சட்டசபை சிறப்புக் கூட்டம் கூடுமானால், அதில் மேல்சபைக்கான அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் 13ம் தேதி துவங்குகிறது. கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை, அலுவல் ஆய்வுக்குழு நாளை கூடி முடிவு செய்கிறது. அந்தக் கூட்டத்தில், நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை ஒட்டி, ஆகஸ்ட் 15ம் தேதி காலை, சட்டசபையில் சிறப்புக் கூட்டம் நடத்தலாமா? அல்லது 14ம் தேதி நள்ளிரவு சிறப்புக்கூட்டம் நடத்தலாமா? என்றும் ஆலோசிக்கப்பட உள்ளது.

latest tamil news

நள்ளிரவில் சிறப்புக் கூட்டம் நடத்த முடிவானால், அதில், சுதந்திரம் கிடைக்க போராடிய தலைவர்களை வாழ்த்தி உறுப்பினர்கள் பேசுவர். பின், பாராட்டு தீர்மானம் நிறைவேற்றப்படலாம். சிறப்புக் கூட்டத்தில், மேல்சபையை கொண்டு வருவதற்குரிய தீர்மானம் நிறைவேற்றும் அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.