போடி சட்டமன்ற தொகுதியில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் !

போடி சட்டமன்ற தொகுதியில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ்!

போடி. ஆக - 09 -
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்மாபட்டி ஆலய கவுண்டன் குளத்தை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தேனி மாவட்டம் போடி  சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலய கவுண்டன் குளத்தை தனியார்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் நேற்று உடனடியாக ஓ பன்னீர்செல்வம் பார்வையிட்டார் அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றவும். உபரி வாய்க்கால் மற்றும் வரத்து வாய்க்கால் ஆகிய பகுதிகளில் சரிசெய்து குளத்தில் தண்ணீர் வருவதற்கான பணிகளை உடனடியாக நிறைவேற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டு கோரிக்கை மனுக்களை பெற்றார்.அம்மாவட்டத்தில் உள்ள சுமார் 100 குடியிருப்பில் கொண்ட காலனி பகுதிக்கு சாலை வசதி அமைக்க ஆய்வினை மேற்கொண்டார். மேலும் வினோபாஜி காலனியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை  பார்வையிட்டார்.

அதன் பின்பு ,அணை பிள்ளையார் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில்கலந்து கொண்டு   சிறப்பு தரிசனம் செய்த பின்பு  அணையில் நடந்துவரும் வளர்ச்சி திட்டப்பணிகளையும்  ஆய்வு செய்தார். இந்நிகழ்வின்போது போடி ஒன்றிய கழக செயலாளர் சற்குணம், நகர கழக செயலாளர் பழனிராஜ்,  ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் வெங்கடேஷ், மாவட்ட இலக்கிய அணி தலைவர் குருமணி ஒன்றிய மகளிரணி செயலாளர் கனிமொழி ஜெயராஜ் ,தமிழ் மாநில காங்கிரஸ் தேனி மாவட்ட தலைவர் மகேந்திரன் மற்றும். அரசு பொறியாளர்கள்,அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.