ஈரோடு மாவட்டத்தில் எளிமையாக கொண்டாடப்பட்ட கோகுலாஷ்டமி !!!

ஈரோடு மாவட்டத்தில் எளிமையாக கொண்டாடப்பட்ட கோகுலாஷ்டமி !!!

ஆவணி அஷ்டமி ஓட்டி வீர காலபைரவருக்கு அன்னாபிஷேகம் செய்து அலங்காரம் செய்த போது எடுத்த படம்
 

ஈரோடு,ஆகஸ்ட் 31; கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கிருஷ்ண ஜெயந்தி விழா வீடுகளில் எளிமையாக கொண்டாடப்பட்டது. மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள், கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் தங்கள் வீட்டுக் குழந்தைகளை கிருஷ்ணராகவே  பாவித்து கிருஷ்ணன், ராதை வேடமணிந்து அழகு பார்ப்பது காலங்காலமாய் வழக்கமானது.


கோவில்கள், வீடுகளில் அரிசி மாவினால் குழந்தை காவடி தடத்தை பதித்து வழிபாடும் செய்வதுண்டு. கிருஷ்ண ஜெயந்தி தினமான நேற்று  தொற்றால் சில வீடுகளில் சில கோவில்களிலும் மட்டுமே மிக எளிமையாக கொண்டாடப்பட்டது. ஈரோட்டில் டீச்சர்ஸ் காலனி, காரைக்கால் நகர வீதி சில பகுதிகளில் வீட்டில் மாவிலைத் தோரணம் கட்டி, வாசலில் சாணம் தெளித்து, வாசல்படி முதல் பூஜை அறை வரை கிருஷ்ணரின் காலடி தடம் பதித்து, மக்கள் வழிபட்டனர். கள்ளுக்கடை மேடு ஆஞ்சநேயர் கோவில் உற்சவ ராதா கிருஷ்ணன் சிறப்பு அலங்காரதில் அருள் பாலித்தார். குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், ராத்திரி சத்யபாமா ருக்மணி ராதா கிருஷ்ணன் கோவிலில் உள்ள கோவில்களில் எளிமையாக வழிபாடு நடந்தது.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் செல்லீஸ்வரர் வரையறாவுக்குட்பட்ட ஈஸ்வரன் கோயில்களில் ஆண்டுதோறும் ஆவணி அஷ்டமி தினத்தன்று, பிரசித்திபெற்ற வீர கால பைரவருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். திருக்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கால பைரவருக்கு அன்ன அபிஷேகம் செய்யப்பட்டது. கால பைரவருக்கு அன்ன அபிஷேகம் செய்தால், மக்கள் நோய், நொடியின்றி வாழ்வார்கள் என்பது ஐதீகம். 
அபிஷேக அலங்கார ஆராதனை பூஜைகளை தொடர்ந்து காலபைரவருக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு, அதன் பிறகு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.


இதில் தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் மற்றும் காலபைரவர் குழுவினர் செய்திருந்தனர். பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.