வார ராசி பலன்கள் (30.8.2021 முதல் 5.9.2021 வரை) 

வார ராசி பலன்கள் (30.8.2021 முதல் 5.9.2021 வரை) 


 மேஷம் 

அஸ்வினி-1,2,3,4, பரணி-1,2,3,4, கார்த்திகை-1 ஆகிய நட்சத்திரப் பாதங்களைக் கொண்டவர்களும் ச,சே,சோ,ல,செ,சை,லி,லு,லே,லோ,சொ,சௌ,அ,ஆ ஆகிய பெயர் எழுத்துக்களை கொண்ட மேஷ ராசி அன்பர்களே! முரட்டுத்தனமும், முன்கோபம் கொண்ட மேஷ ராசி நேயர்களே! குலதெய்வ வழிபாட்டின் மூலம் நன்மைகள் அதிகம் உண்டாகும். உடல் நலத்தில் அவ்வப்போது சிறு உபாதைகள் இருந்தாலும் நிவர்த்தி பெற்று ஆரோக்கியம் மேம்படும். வருமானங்கள் பல வழிகளில் வந்து சேரும். கேட்கும் இடத்தில் கடன்கள் கிடைக்கும். கடன் வாங்குவதில் கட்டுப்பாடுகள் அவசியம். குடும்ப ஒற்றுமை சிறப்பாக அமைய விட்டுக்கொடுத்து செல்வது நன்மையாகும். தாயின் உடல்நலத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்பட்டு ஆரோக்கியம் மேம்படும். தைரியம், துணிச்சல் அதிகரிக்கும். சொத்துக்கள் வாங்குவதற்கும் பராமரிப்பு செய்வதற்கும் செலவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்து எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். கல்வி பயிலும் நிலையில் உள்ளவர்களுக்கு படிப்பில் ஈடுபாடும் முன்னேற்றமும் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் அமைவதில் உள்ள இழுபறிகள் தொடர்ந்த போதிலும் விரைவில் நல்ல இடமாக அமையும் வாய்ப்புகள் உண்டாகும். புத்திரபாக்கியம் இதுவரை  தடைபட்டு வந்தவர்களுக்கு விரைவில் நிவர்த்தியாகும். தொழில் வளர்ச்சி முன்னேற்றம் உண்டாகும். சொந்த தொழில் செய்வதற்கு முயற்சி செய்பவர்களுக்கு உரிய வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ள நபர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரம், விவசாயம் போன்றவற்றின் மூலம் ஆதாயம் அதிகம் கிடைக்கும். கால்நடைகள் மற்றும் வண்டி ,வாகனங்கள் வாங்குவதற்கான யோகங்கள் உண்டாகும். மன அமைதி கிடைக்க கோபத்தை குறைக்க வேண்டும். 


 பரிகாரம் 
 முருகன் வழிபாடும் சிகப்பு நிற ஆடைகள் தானம் கொடுப்பதும் மன அமைதிக்கு வழிவகுக்கும்.


 ரிஷபம் 

கார்த்திகை-2,3,4,ரோகிணி-1,2,34,மிருகசீரிடம்-1,2 ஆகிய நட்சத்திரப் பாதங்களைக் கொண்டவர்களும் இ,உ,ஏ,ஈ,ஒ,வ,வி,அவாதி,வே,வோ ஆகிய பெயர் எழுத்துக்களை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! கள்ளம், கபடமில்லாமல் உழைக்கும் ஆற்றல் உள்ளவர்களும், வாழ்க்கையை ஆடம்பரமாக வாழ்ந்து காட்டுவதில் வல்லவர்களுமான ரிஷப ராசி நேயர்களே! தைரியம், துணிச்சல் அதிகரிக்கும். மன சஞ்சலங்கள் படிப்படியாக சரியாகும். உடல்நலத்தில் அக்கறையும் கவனமும் தேவை. மருத்துவச் செலவுகள் மற்றும் கடன்கள் அதிகமாவதை தவிர்க்க கவனமாகவும் திட்டமிட்டு செயல்படுவது மிகுந்த நன்மைகளை கொடுக்கும். சகோதர உறவுகளில் இருந்து வந்த மனக்கசப்பு மறைந்து ஒற்றுமை உண்டாகும். புதிய சொத்து வாங்கவும் பழைய சொத்து விற்கவும் மேற்கொண்ட முயற்சி நல்ல பலனைக் கொடுக்கும். கல்வி  தொடர்பான முயற்சிகள் வெற்றி தரும். புதிய முயற்சிகளுக்கான பலன்கள் உடனே கிடைக்கும். திருமண வயதினர் தாங்கள் விரும்பியபடியே வரன் அமைந்து வாழ்க்கை சந்தோசத்தை கொடுக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வந்து சேரும். உத்தியோகம் தேடுபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பெரிய உத்தியோகம் அமைந்து மகிழ்ச்சியை உண்டாக்கும். தொழிலதிபர்களுக்கு சரிவில் இருந்து மீண்டு வளர்ச்சி ஏற்படும் காலம் ஆகும். விவசாயம், வியாபாரம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ஆதாயம் அதிகரிக்கும். குழந்தைகளின் வளர்ச்சி, முன்னேற்றம் சந்தோஷத்தை உண்டாக்கும். தொழில் இடமாற்றம் கூடுதல் பணிச்சுமையை அதிகரிக்கும்.
 

பரிகாரம் 
 விஷ்ணு வழிபாடும், கால்நடைகளுக்கு அகத்திக்கீரை மற்றும் தீவனங்கள் வழங்குவதால் மனதிற்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் உண்டாகும்.


 மிதுனம் 

மிருகசீரிடம்-3,4, திருவாதிரை- 1,2,3,4, புனர்ப்பூசம்-1,2,3 ஆகிய நட்சத்திரப் பாதங்களைக் கொண்டவர்களும் கா,கி,கு,க,ஞ,ச,கே,கோ,ஹ ஆகிய பெயர் எழுத்துக்களை கொண்ட மிதுன ராசி அன்பர்களே! விகடகவி என்று அழைக்கப் பெறுபவர்களும், நகைச்சுவை உணர்வு உள்ளவர்களுமான மிதுன ராசி அன்பர்களே! உடல்நலம், ஆரோக்கியம்,புகழ் மேம்படும். தைரியம், துணிச்சலுடன் செயல்பட்டு அனைத்துக் காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். புதிய வாகனம் வீடு-மனை  சொத்து சேர்க்கை மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கும். மனதில் ஏற்படும் சலனங்களைத் தவிர்த்து முழு முயற்சியுடன் செயல்படுவதன் மூலம் வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். பங்குசந்தையில் கவனமாக செயல்பட்டு ஆதாயத்தை அதிகப்படுத்தலாம். பூர்வீக சொத்து விற்பதற்கான முயற்சிகள் நல்ல பலனைத் தரும். தொழில் வாய்ப்புகள் வாசல் தேடி வரும். தொழில் வருமானம் அதிகரிக்கும். தொழிலில் கௌரவம், அந்தஸ்து,புகழ் கூடும்.ஊதிய உயர்வு பதவி உயர்வு கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும். சகோதர உறவுகளுடன் அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். திருமண வயதினருக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவீர்கள். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்துச் செல்வதனால் தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும் புதியதொரு உத்வேகத்துடன் செயல் பட்டு வெற்றியுடன் வலம் வரும் வாய்ப்புகள் ஏற்படும்.

பரிகாரம் 
 வெங்கடாசலபதி வழிபாடும், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, பேனா, பென்சில்கள் வழங்குவதன் மூலம் அறிவாற்றல் மேம்படும்.
 

கடகம் 

புனர்ப்பூசம்-4,பூசம்-1,2,3,4, ஆயில்யம்-1,2,3,4 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் ஹ,ஹி,ஹீ,ஹே,க,கை,கொ,கௌ,டி,டு,டே,டோ ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட கடக ராசி அன்பர்களே!
 அன்பிற்கும், பாசத்திற்கும் கட்டுபவர்களும், சாதுரியமாக காரியம் சாதிக்கும் திறமை பெற்ற கடக ராசி நேயர்களே! சிறந்த தெய்வ பக்தியும், ஆன்மிக பயணங்களும் உண்டாகும். பல்வேறு விதமான வித்தைகளை கற்றுத் தெளியும் மனநிலை ஏற்படும். செல்வ சிறப்பு மிக்கவர்களாகவும், ஆளடிமை  கொண்டவர்களாகவும் விளங்குவீர்கள். புத்தி சாதுர்யத்துடன் காரியங்களை சாதித்து சாதனையாளர் பட்டியலில் இடம் பெறும் வாய்ப்புகள் உருவாகும். வெளியூர் மற்றும் தொலைதூரப் பயணங்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் உண்டாகும். அலைச்சல் அதிகரிப்பால் மன சஞ்சலமும், உடல் அசதியும் அவ்வப்போது வந்து போகும். ஆகையால் உடல் நலம், மன நலம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது சிறப்பைத் தரும். விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் சாதனை செய்து வெற்றி பெறும் சூழல் அமையும். கல்வியில் சற்று மந்த நிலை காணப்படும். வருமானங்கள் தேவைக்கேற்ப வந்தாலும் அதற்கான செலவுகளும் அதிகரித்து சேமிப்புகள் கரையும். துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும் .சொத்துக்கள் வாங்குவதற்கும், வண்டி, வாகனங்கள் பராமரிப்பதற்கும் சுப விரையச் செலவுகள் ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. பிள்ளைகள் தொடர்பான முயற்சிகள் நல்ல பலனைக் கொடுக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகமாகும். குடும்பத்தை விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். பரிகாரம் 
 அம்மன் வழிபாடும், முதியோர்களுக்கு உணவு மற்றும் ஆடைகள் வழங்குவதால் நினைத்த காரியம் நிறைவேறும்.


 சிம்மம் 


மகம்-1,2,3,4,பூரம்-1,2,3,4, உத்திரம்-1 ஆகிய நட்சத்திரப் பாதங்களைக் கொண்டவர்களும் ம,மி,மு,மை,மே,மோ,டி,டு,மா,மீ,மௌ,டே ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்டவர்களுமான சிம்ம ராசி அன்பர்களே! கௌரவம், அந்தஸ்து, புகழ் ஆகியவற்றில் பற்று உள்ளவர்களும், தன்னுடைய உத்தரவை ஏற்று செயல்படும் கூட்டத்திற்கு தலைமை ஏற்கும் பண்பு கொண்ட சிம்மராசிக்காரர்களே! நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றலும், தைரியமும் உண்டாகும். உடல்நலம் ஆரோக்கியம் மேம்படும். தொழில் மூலம் வருமானம் கிடைத்தாலும் தொழில் வளர்ச்சிக்கு பயன்படும் வாய்ப்புகள் உருவாகும். கலைத்துறையினர் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி சாதனை புரிவார்கள். கல்வி தொடர்பான முயற்சிகளுக்கு சிறு தாமதம் ஏற்பட்டாலும் முடிவில் நல்ல பலன்கள் கிடைக்கும். தொழில் வருமானங்கள் குடும்ப செலவினங்களுக்காக பயன்படுத்தப்படும். திருமண வயதினரின் வரன் தேடும் முயற்சிக்கு நல்ல தகவல் வந்து சேரும். குடும்ப ஒற்றுமை உண்டாகும். கடன்கள் கட்டிமுடிக்க சூழ்நிலைகள் உருவாகும். விவசாயம் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த ஆதாயம் வந்து சேரும். சொத்து மற்றும் வண்டி, வாகனம் விற்பனை செய்ய முயற்சிப்பவர்களுக்கு நல்ல விலை கிடைக்கும்  அதே சமயத்தில் புதிய முதலீடுகள் தொடர்பான செலவுகள் கூடும். பயணங்கள் பயனுள்ளதாக அமையும். விலங்குகளிடம் கவனம் தேவை. நல்ல நண்பர்கள் அமைவார்கள். அயல்நாடு வியாபாரம் அல்லது வெளியூர் வியாபாரம் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். 
 பரிகாரம் 
சிவன் வழிபாடும்,  கோதுமை மற்றும் ஆரஞ்சு நிற ஆடைகள் தானம் கொடுப்பதன் மூலம் தொழில் முன்னேற்றம் ஏற்படும்.


 கன்னி 


உத்திரம்-2,3,4,அஸ்தம்-1,2,3,4,சித்திரை-1,2 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் டோ,ப,பி,டோ,பீ,பூ,உருபூ,பே ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! நகைச்சுவை உணர்வு மிக்கவர்களும், தன்னுடைய பேச்சு திறமையால் நண்பர்கள் வட்டம் அதிகம் கொண்டவர்களுமான கன்னி ராசி நேயர்களே! புத்திசாலித்தனமாக செயல்பட்டு அதிர்ஷ்டசாலி என்று பெயர் எடுக்கும் வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானங்கள் அதிகமாகும். தைரியம், துணிச்சல் உண்டாகும். தர்ம காரியங்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நல்ல பெயர் கிடைக்கும். எந்த துறையிலும் வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். சகோதர கருத்து வேறுபாடுகள் அகலும். சொத்துக்கள் மீதான கடன் அதிகமாகும். தாயாரின் உடல்நலம் முன்னேற்றம் தரும். தந்தைவழி சொத்து  விற்பனை இலாபம் கிடைக்கும். பெரியோரின் ஆசீர்வாதங்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் உதவி கிடைக்கும் .ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பதன் மூலம் சேமிப்பு அதிகமாகும் .தொழிலில் புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். இலாபங்கள் பல மடங்கு உயரும். எதிர்பாராத திடீர் யோகங்கள் ஏற்படும். புத்திரம் தொடர்பான முயற்சிகள் நல்ல பலன் தரும். வரன் தேடுபவர்களுக்கு திருமணம் உறுதி செய்யப்படும். சுய தொழில் செய்வதற்கான முயற்சிகள் கைகூடும். வியாபாரம், விவசாயம் தொடர்பானவைகள் நல்ல மகசூல் மற்றும் ஆதாயம் கிடைக்கும்.

 பரிகாரம் 
 பெருமாள் வழிபாடும், பச்சை வண்ண ஆடைகள், பச்சைப்பயிறு போன்றவை தானம் கொடுப்பதனால் சொத்து வகையில் ஆதாயம் அதிகரிக்கும்.


 துலாம் 


சித்திரை-3,4,சுவாதி-1,2,3,4,விசாகம்-1,2,3 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் ர,ரி,பை,பௌ,ரு,ரே,ரோ,த,தா,தி,தே ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே! 
 எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரியான தீர்வை வழங்கும் வல்லமை பெற்றவர்களும், நினைவாற்றல் மூலம் உலக  விஷயங்களை ஆராயும் திறமை பெற்றவர்களுமான துலாம் ராசிக்காரர்களே! உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் எடுத்துக்கொள்ளவேண்டும். வருமான தடைகள் நிவர்த்தியாகும். எல்லா காரியங்களிலும் சிறு தாமதங்கள் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சொத்து விற்பனை குறித்த ஆதாயம் கிடைக்கும். சொந்த பந்தங்களோடு அனுசரித்து செல்வது பகையை தவிர்க்கும். சோம்பல் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும். சாதனை செய்ய வாய்ப்புகள் உருவாகும். தொழிலதிபர்களிடம் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் அவர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் விரோதங்களை தவிர்க்கலாம். பெரியோரின் ஆசிர்வாதம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடுகள் நன்மையை தரும். தாயாருடன் உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். சொத்துக்களில் ஏற்பட்ட விரையங்கள் நிவர்த்தியாகும். சகலவிதமான சாஸ்திரங்களையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி சிறப்பாக அமையும். வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு தொழில் அமையும். நினைத்ததைச் செய்து முடிக்கும் ஆற்றலும் வெற்றியும் உண்டாகும்.
 

பரிகாரம் 
ஐய்யனார்(அ) ஐயப்பன் வழிபாடும், வெண் மொச்சை, பட்டுத் துணிகள் தானம் தருவதும் காரிய வெற்றியை உண்டாக்கும்.


 விருச்சிகம்

 
விசாகம்-4,அனுசம்-1,2,3,4,கேட்டை-1,2,3,4 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் தோ,ந,நி,நா,நீ,நு,நே,நோ,ய,யு,நை ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்டவர்களுமான விருச்சிக ராசி அன்பர்களே! ஆராய்ச்சி மனப்பான்மையும், புதியதொரு கண்டுபிடிப்புகளில் ஆர்வமும், சந்தர்ப்பங்களை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சாதுர்யமும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! உடல்நலத்தில் இருந்து வந்த தொந்தரவுகள் நிவர்த்தி பெற்று ஆரோக்கியம் மேம்படும். வருமானங்கள் எவ்வளவு வந்தாலும் ஏதேனும் ஒரு சில செலவுகளில் முடக்கம் ஆவது சற்று சிரமமாக இருந்தாலும் அவை அனைத்தும் சுப விரையச் செலவாக இருப்பது மனதிற்கு ஆறுதல் உண்டாகும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கேற்ப பழைய சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவீர்கள். பூர்வீகச் சொத்தின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். கடன்கள் தேவையான அளவு கிடைக்கப்பெறும். தொழில் வளர்ச்சிக்கான கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். வார நாட்களில் செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனத்தையும் நிதானத்தை கடைபிடிப்பது சிறப்பாகும். மன சஞ்சலங்கள், மன குழப்பம் இருந்தபோதிலும் படிப்படியாக நிவர்த்தி கிடைக்கும். தொழில் வளர்ச்சி முன்னேற்றம் சிறப்பாக அமையும். வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு உடனடியாக வாய்ப்புகள் கிடைக்கும்.காரிய சாதனை, தொழில்துறையில் நற்பெயர் எடுத்தல் ,வழக்கில் வெற்றி பெறுதல் ,கடன்கள் அடைதல் போன்ற நற்பலன்கள் உண்டாகும்.
 பரிகாரம் 
 பைரவர் வழிபாடும், சிவப்பு நிற ஆடைகள் தானம் கொடுப்பதனால் முன்னேற்றத்திற்கான வழி கிடைக்கும்.


 தனுசு 


மூலம்-1,2,3,4,பூராடம்-1,2,3,4,உத்திராடம்-1 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் யே,யோ,ப,பி,பு,பூ,த,ப,ட,பே ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! இருவகையான குணநலன்கள் உடையவர்களும், மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குவதில் ஆசானாகவும் விளங்கும் தனுசு ராசி நேயர்களே! உடல்நலத்தில் கவனம் தேவை. மனசஞ்சலத்தில் இருந்து விடுபட தியானம் மற்றும் இறைவழிபாடு சிறப்பைத் தரும். உறவினர்களுடன் அடுத்தடுத்து செல்வது நன்மை உண்டாகும். வயிறு தொடர்பான உபாதைகள் வந்து செல்லும். ஆடம்பர செலவுகளை  குறைத்துக் கொள்வதன் மூலம் சேமிப்பை அதிகப்படுத்த முடியும். சோம்பலைத் தவிர்க்கவும். சிக்கன வாழ்க்கை உடையவர்களாக திகழ்வீர்கள். ஒரு சிலர் திருமண வயதினை உடையவர்கள் தங்கள் விருப்பத்திற்கு திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு உருவாகும். களத்திரத்துடன் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் கருத்து வேறுபாடுகளை குறைக்க முடியும். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தங்களுக்கு சந்திராஷ்டம தினமாக இருப்பதால் பொறுமையும் நிதானமும் தேவைப்படும். இடமாற்றங்கள் தாங்கள் விரும்பிய படியே உண்டாகும். தாய் மற்றும் தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். அவர்களுடன் உள்ள கருத்து வேறுபாடு படிப்படியாக குறையும். உடன் பணியாற்றுபவர்களுடன் தர்க்கம்  புரியாமல் இருப்பது நன்மையை ஏற்படுத்தும். பேச்சுத் திறமை அதிகரிக்கும். வாக்குப்பலிதம் உண்டாகும். கல்வியில் மந்த நிலை காணப்பட்டாலும் ஹயக்ரீவர் வழிபாடு செய்வதன் மூலம் வெற்றி உண்டாகும்.

பரிகாரம் 
தட்சிணாமூர்த்தி வழிபாடும், கொண்டக் கடலை மற்றும் மஞ்சள் நிற ஆடைகள் தானம் கொடுப்பதன் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள்.
 

மகரம்

 
உத்திராடம்-1,2,3,4, அவிட்டம்-1,2,திருவோணம்-1,2,3,4 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் ஜ,ஜா,ஜி,ஜே,ஜோ,க,கா,கீ ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட மகர ராசி அன்பர்களே! சிக்கனமானவர்களும், காரியங்களை சாதித்துக் கொள்வதில் வல்லமை பெற்றவர்களுமான மகர ராசிக்காரர்களே!எதிலும் வெற்றி பெறும் வாய்ப்புகள் உருவாகும். உபாயங்களை அறிந்து அதற்கேற்ற வகையில் செயல்படுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். கண்டிப்பான வார்த்தைகள் பேசுவதை தவிர்ப்பதனால் நட்பு வட்டங்கள் பெருகும். சிக்கனமாகவும் கஞ்சத்தனமாகவும் இருப்பதால் பொருளாதாரத்தில் சிக்கல் இல்லாமல் வாழ்க்கையை அமைக்க முடியும். கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். வருமானங்கள் தேவைக்கேற்ற வகையில் வந்து சேரும். திருமண முயற்சிகள் கைகூடிவரும். அரசு வழி ஆதாயங்கள் கிடைக்க பெறுவீர்கள். சுகபோஜனம் அமையும். பகை வெல்லும் திறன் படைத்தவர்கள். தாய்மாமன் உடைய ஆதரவுகள் உண்டாகும். திடீர் பயணம் ஏற்படும். செல்வாக்கு உயரும். பொருள் தட்டுப்பாடு ஏற்படாது. வருமானம் அதிகரிக்கும். யோகக்காரர்களாக திகழ்வீர்கள். கடன் வாங்கும் அமைப்பு ஏற்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு உதவி செய்வதன் மூலம் நற்பெயர் உண்டாகும். பிள்ளைகளுக்கான திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும். மன உளைச்சலில் இருந்து விடுபட தியானம் மற்றும் உடற்பயிற்சி செய்வதானால் நிவர்த்தி உண்டாகும்.

பரிகாரம் 
 குலதெய்வ வழிபாடும், கருப்பு நிற ஆடைகள் தானம் கொடுப்பதனால் விரையச் செலவுகள் கட்டுக்குள் வந்து சேரும்.


 கும்பம் 


அவிட்டம்-3,4,சதயம்-1,2,3,4,பூரட்டாதி-1,2,3 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் கு,கூ,ஞ,ஞா,கோ,கே,ஸ,ஸி,தோ,ந,தௌ,ஸே,ஸோ,த ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே! பல்வேறு திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ளவர்களும், பிடிவாத குணம் நிறைந்தவர்களுமான கும்ப ராசிக்காரர்களே! சாஸ்திரம், சம்பிரதாயங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வருமானம் தேவைக்கேற்ப வந்து சேரும். ஆடை அணிகலன்கள் சேர்க்கை உண்டாகும். பல்வேறு தரப்பினருக்கு ஆலோசனைகள் வழங்குவதன் மூலம் கௌரவம், அந்தஸ்து கூடும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வது பிரிவினையை தடுக்கும். அலைச்சல் அதிகமாகும். விஷ ஜந்துக்களிடம் இருப்பது பாதுகாப்பாக நன்மை அளிக்கும். அடி வயிறு தொடர்பான உபாதைகள் வந்துபோகும். வியாபாரத்தில் பொருள் நஷ்டங்களை தவிர்க்க திட்டமிட்டு செயல்படுவது இலாபத்தை அதிகப்படுத்தும். உற்றார் உறவினர்களுடன் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பகைமையைத் தவிர்க்கலாம். களத்திரத்தின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். தொழில் வளர்ச்சி முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு, கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைபட்ட திருமணம் அவசரமாக நடைபெறும் சூழல் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். மாமன் வகையறாவுடன் ஒற்றுமை அதிகமாகும். தயாள குணத்தால் ஏழை எளியோருக்கு உதவி செய்வதன் மூலம் அதிர்ஷ்டம் நிறைந்தவராக புகழப்படுவீர்கள். தாயின் உடல் நலம் சிறப்படையும். கல்வியில் முன்னேற்றம் உண்டு. வீடு மனை, வாகன யோகம் உண்டாகும்.

 பரிகாரம் 
 கருப்பசாமி மற்றும் ஊரின் காவல் தெய்வ வழிபாடும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஊதா நிற ஆடைகள் தானம் கொடுப்பது சிறப்பாகும்.


 மீனம் 


பூரட்டாதி-4,உத்திரட்டாதி-1,2,3,4,ரேவதி-1,2,3,4 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் தா,தீ,து,நோ,நௌ,ஞ,ஞா,தே,தோ,சா,சி,சீ ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட மீன ராசி அன்பர்களே! இளகிய மனம் படைத்தவர்களும், ஆலோசனை வழங்குவதில் கெட்டிக்காரர்களும், பெரியோர்களிடம் பணிவுடன் நடந்து கொள்ளும் பக்குவம் பெற்ற மீன ராசி நேயர்களே! உடல்நலம் ஆரோக்கியம் மேம்படும்.செல்வம் பல வழிகளில் செலவாகி சேமிப்புகள் குறையும். நினைத்த காரியம் தாமதமாக நிறைவேறும். காரிய சாதனை செய்து புகழ் பெறும் வாய்ப்புகள் உண்டாகும். சொத்து சேர்க்கை ஏற்படும். திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப விரையச் செலவுகள் அதிகமாகும். கட்டாயக்கல்யாணம் அல்லது காந்தர்வக் கல்யாணம் உண்டாகும் சூழல் அமையும். பகை வெல்வீர்கள். கடன், வழக்கு, பிணி, பீடைகள் நிவர்த்தியாகும். விருதுகளும் பாராட்டும் கிடைக்கப்பெறும். சகோதர உதவிகள் கிடைக்கும். தைரியம், துணிச்சலுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உஷ்ணம், பித்தம் தொடர்பான உபாதைகள் வந்துபோகும். போட்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். பணியாட்களுடன் கவனமாக நடந்துகொள்வது நன்மை தரும். தர்மசிந்தனை உண்டாகும். சுக போகங்களில் நாட்டம் அதிகமாகும். விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாட்டின் மூலம் புத்திர தோஷம் நிவர்த்தி பெற்று குழந்தைச் செல்வம் உண்டாகும். வருவாய் அதிகரிக்கும். நினைத்த காரியம் வெற்றி அடைவதன் மூலம் நற்பெயர், புகழும் சிந்தித்து கவனமாக செயல்படுவது வெற்றியை கொடுக்கும்.


 பரிகாரம் 
 குரு வழிபாடும், மஞ்சள் நிற ஆடைகள் தானம் கொடுப்பதும் மிகுந்த நன்மையை கொடுக்கும்.


 வளம் தரும் வாஸ்து குறிப்புகள் 


 (1)மனை மற்றும் வீட்டின் கிழக்கு திசையை சரியாக அமைந்து இருந்தால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அறிவு, ஆற்றல், திறமை, புகழ், செல்வம், செல்வாக்கு பெற்று சிறப்பாக வாழ்ந்து சாதனை படைப்பார்கள். குறிப்பாக ஆண்களின் வளர்ச்சி அற்புதமானதாக அமையும்.


(2) ஒரு வீட்டில் வசிப்பவர்களின் செல்வாக்கு உடல்நலம், மனநலம் போன்றவை அந்த வீட்டின் வடகிழக்கு திசையை மையமாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. ஆகையால் வடகிழக்கு திசையை சரியாக அமைப்பதன் மூலம்  வருவாய் இழப்பு, வீண் விரயங்கள், விபத்துக்கள், உடல் உறுப்புகள் இழப்பு, உயிரிழப்பு, பெண்களுக்கு கருச்சிதைவு, ஊனமுற்ற குழந்தைகள் பிறப்பு, மனவளர்ச்சி குன்றுதல், குழந்தை பாக்ய தடைகள், திருமணத்தடை, கல்வித்தடை போன்றவை ஏற்படாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அதனால் தான்  இந்த திசையை புனிதமானதாகக் கருதி சரியாக அமைக்கும் போது வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களும் செல்வாக்கும் பெற்று வாழ்க்கையை மகிழ்ச்சி சந்தோஷமாக மாற்றும் வல்லமை உண்டு. ஆக வாழ்க்கையை வளமிக்கதாக அமைப்பது வடகிழக்கு திசையாகும்.


(3) பஞ்சபூதங்கள் என்று அழைக்கப்படுவது நீர்,நிலம்,நெருப்பு, காற்று,ஆகாயம் ஆகும். ஒரு வீடானது மனையடி  சாஸ்திரப்படியும், பஞ்சபூதங்களின் குணங்களும் ஏற்றவாறும் கட்டவேண்டும். பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றுக்கும் பல்வேறு வகையான குணங்கள் இருக்கும். அவற்றின் குணங்களுக்கு ஏற்ற வகையில் வீட்டை அமைக்க வேண்டும். உதாரணமாக நிலம் எனும் தத்துவத்தை நாம் எடுத்துக் கொள்வோம். நிலம் என்பது நாம் வசிக்கும் பூமி தான். இந்த பூமிக்கு ஸ்பரிசம்,ரசம்,ரூபம்,ஒலி காந்தம் ஆகிய இந்த குணங்கள் உண்டு. இவற்றில் ஒரு குணத்தை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம் .அதாவது காந்தம் என்ற குணம். காந்தத்திற்கு வடதுருவம், தென்துருவம் என்று இரு துருவங்கள் உண்டு பூமியின் இந்த காந்த திசைக் கேற்ப நாம் தெற்கில் தலை வைத்து படுக்க வேண்டும் அல்லது மேற்கில் தலை வைத்து படுக்க வேண்டும். பூமியின் காந்த விசை மாறாக வடக்கு மற்றும்  கிழக்கில் தலைவைத்து படுக்க கூடாது அவ்வாறு வடக்கில் தலை வைத்து படுத்தால் தலை பாரமாகி மன அழுத்தம் உண்டாகி  கெட்ட கனவுகள் ஏற்படும் .தூக்கத்திலிருந்து எழுந்து நடக்கும்படி ஆகி விடும் ஆகையால் கட்டாயம் வடக்கில் தலை வைத்து படுத்து உறங்குவதை தவிர்க்கவேண்டும். ஆக பஞ்சபூதங்களின்  குணநலன் ஏற்ப வீட்டை அமைத்து அதற்கு ஏற்ப வாழ்க்கை முறையை  அமைத்துக் கொண்டால் வாழ்க்கை எப்பொழுதும்  வளமாகவும் மகிழ்ச்சி சந்தோஷம் உள்ளதாகவும் அமையும்.