வாழ்வா சாவா போராட்டத்தில்  ஊர்க்காவல் படை வீரர்கள்! கருணை காட்டுவாரா விடியல் முதல்வர்?

வாழ்வா சாவா போராட்டத்தில்  ஊர்க்காவல் படை வீரர்கள்! கருணை காட்டுவாரா விடியல் முதல்வர்?

சென்னை ஆக,30;தமிழக காவல் துறைக்கு உறுதுணையாக இருந்து வரும் ஊர் காவல் படையினர் தற்போது வாழ்வா ? சாவா? போராட்டத்தில் உள்ளனர்.விடியல் அரசின் முதல்வர் ஸ்டாலின் கடைக்கண் பார்வை இவர்கள் மீது படுமா?

16 ஆயிரம் ஊர் காவல் படையினர்:தமிழக காவல்துறைக்கு உறுதுணையாக பணியாற்றிவரும் 16.000 க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படை வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கை  ஒன்று இன்று சோக குரலாக ஒலித்துக் கொண்டு உள்ளது

 சோகக் குரல்: இவர்களின் மன வேதனையை பகிர்ந்து கொள்ள முடியாமல் இருக்கும் கள்ளக்குறிச்சி ஊர்க்காவல் படை வீரர் சரவணன் என்பவர்  மனதில் பட்ட  ஒரு குரல் இங்கே ஏதிரோலிக்கிறது.. தமிழக ஊர்க்காவல் படை வீரர்களுக்கு மாதத்தில்  ஐந்து நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டு, நாளொன்றுக்கு ரூ.560 வீதம்,ரூ.2800 மாத ஊதியமாக கிடைத்த வருகிறது. இந்த குறைந்த ஊதியத்தை வைத்து குடும்பத்தை வழி நடத்த முடியாமல் தினரி  வரும் இவர்கள்  இன்றைய காலகட்டத்தில் இது இவர்களுக்கு போதுமானதாக இருக்குமா? என்றால் அது மிகப் பெரிய கேள்விக்குறியே?

மாதாந்திர செலவுகள்: வீட்டுவாடகை-ரூ.5000. கேஸ் சிலிண்டர் ரூ,900. டெலிவரி ரூ,950. மின்சாரம்-ரூ,2000.  குழந்தைகள் பள்ளி கட்டணம்-,2,000. குழந்தைகள் பேருந்து கட்டணம்-ரூ,1000. மளிகை சாமான்கள்-ரூ,3000.  பால் செலவு-ரூ,500. பெட்ரோல்-ரூ,5000. செல்போன் ரீசார்ஜ் -ரூ,300. ஹோட்டல் செலவுகள்-ரூ,2000.  மருத்துவ செலவுகள்-ரூ,2000. காய்கறிகள்-ரூ,2000. இதர செலவுகள் -ரூ,2000. மொத்தம்-ரூ,28,650

மாறாத ஊர்க்காவல் படை வீரர்களின் நிலை:உண்மை இதுதான்,உண்மை இப்படி இருக்க ஊர்க்காவல் படை வீரர்கள் நல்ல வருமானம் பெற்று வாழ்வதாக பலரும் ineuv நினைத்திருக்கும் நிலை. இது சமர்ப்பணம் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தலைமை மாறி மாறி வரும் நிலையில் ஆட்சி மாறினாலும் தமிழக ஊர்க்காவல் படை வீரர்களின் நிலைமை மாறவில்லையே, ஊர் காவலர்களின் தற்கொலைகள்  ஊதிய உயர்வு உட்பட எதையும் யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. இதை எந்த அரசும் கவனம் செலுத்தாதது வேதனையான ஒன்று தான்.

மேலும் உடல் நலக் குறைவால் மற்றும் ஊரடங்கு காலகட்டத்தில்  கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஊர் காவலர்கள்  உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பம் இன்று நடுவீதியில் தள்ளப்பட்டிருக்கிறது. எனவே  உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் இதுவரை  கிடைக்கவில்லை

இன்றைய தமிழக முதல்வர்  ஏற்கனவே    எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பொழுதே  சட்டமன்றத்தில் குரல் எழுப்பி தமிழ்நாடு ஊர்க்காவல் படை காவலர்களை இரண்டாம் நிலை காவலர்களாக பணியமர்த்த வேண்டும் என்கின்ற கோரிக்கையையும் சட்டமன்றத்தில் பதிவு செய்திருந்தார், இன்று அவர் முதல்வர் ஊர்க்காவல்  படையில் கௌரவ பதவி வகிக்கும் முக்கிய புள்ளிகள் மற்றும் தொழிலதிபர்கள் எங்களுக்கு மாத சம்பளத்தை சரியாக வழங்கப்படுவதை தடுக்க படுகிறார்கள், எனவே காவல் துறையை கவனிக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ஊர் காவலர்களின்  விஷயத்தில்  விரைந்து தலையிட்டு விசாரணை செய்து எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

2021 திமுக தேர்தல் அறிக்கையில் தமிழ்நாடு ஊர்க்காவல் படையினருக்கு பணி நாட்கள் உயர்த்தப்படும் என்றும், எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில்  அறிவித்துள்ளார்,  எனவே தமிழக காவல்துறைக்கு பேருதவியாக  செயல்படும் ஊர்க்காவல் படை வீரர்களின் தியாகத்தையும் அங்கீகரிக்கும் வகையில்  மாதம் முழுவதும் பணி வழங்கி நிரந்தரம் செய்தும், உடல்நலக் குறைவாலும் மாற்றும் கொரோனாவிலும் உயிரிழந்த ஊர் காவலர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்