கரூர் மாவட்ட ஊராட்சி 8 வது உறுப்பினர் தானேஷ் அறிமுக கூட்டம்! முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் பங்கேற்பு!

கரூர் மாவட்ட ஊராட்சி 8 வது உறுப்பினர் தானேஷ் அறிமுக கூட்டம்! முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் பங்கேற்பு!

கரூர்,செப்27; கரூர் மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு கரூர் மாவட்ட அஇஅதிமுக சார்பில் 
கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். வேட்பாளர  அறிமுக கூட்டம்  மற்றும் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக கூட்டம்
தாந்தோணி கிழக்கு ஒன்றியம் வெள்ளியணை ஊராட்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆலம் தங்கராஜ்  தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர்  கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிகள் குறித்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும் கரூர் மாவட்ட கழக  அவைத்தலைவருமான ஏ.ஆர்.காளியப்பன், தாந்தோணி ஒன்றிய துணை பெருந்தலைவர் பெரியசாமி, மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் கே.கமலக்கண்ணன், தொகுதி கழக செயலாளர் வழக்கறிஞர் சி.நகுல்சாமி, குளித்தலை நகர கழக செயலாளர் சோமு ரவி, ஒன்றிய செயலாளர்கள் இளங்குமரன், .கருணாகரன், .கலையரசன், .ரெங்கசாமி,  மற்றும் பாசறை ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் .பழனிச்சாமி புஞ்சை புகழூர் பேருர் கழக செயலாளர்  கே.சி.எஸ்.விவேகானந்தன், .வேங்கை ராமச்சந்திரன், தாந்தோணி ஒன்றிய செயலாளர் சதீஸ்குமார் உள்ளிட்ட  கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.