அம்மா எக்ஸ்பிரஸ் நாளிதழினை ஆர்வமுடன் படிக்கும் எடப்பாடியார்- முன்னாள் அமைச்சர்கள் - கழக நிர்வாகிகள்!

அம்மா எக்ஸ்பிரஸ் நாளிதழினை ஆர்வமுடன் படிக்கும் எடப்பாடியார்- முன்னாள் அமைச்சர்கள் - கழக நிர்வாகிகள்!


காஞ்சிபுரம்,செப்27; காஞ்சிபுரம் மாவட்ட   உள்ளாட்சி மன்ற அதிமுக வேட்பாளர்கள் அறிமுக விழா கூட்டம் காஞ்சிபுரம் சுகுமாரி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடியார் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அம்மா எக்ஸ்பிரஸ் நாளிதழ் பிரதியை காஞ்சிபுரம் மாவட்ட நிருபர் எஸ்.சதீஷ், தாலுக்கா நிருபர் அசோக் குமார் ஆகியோர்  வழங்கினார். 

இதில் அம்மா எக்ஸ்பிரஸ் நாளிதழ் பிரதியை முன்னாள் முதல்வர் எடப்பாடியார் வாங்கி படித்தார் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், பெஞ்சமின், ஆர்.காமராஜ், கோகுல இந்திரா,  கழக அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் எம்.எல்.ஏ.மதனந்த புரம் கே.பழனி, போந்தூர் ராஜன் மற்றும் கழக முன்னணியினர் அம்மா எக்ஸ்பிரஸ் நாளிதழினை வாங்கி ஆர்வமுடன் படிக்கும் காட்சி.