முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் இளையமகன் ஜெய பிரதீப் செய்த மனிதாபிமான உதவி!

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் இளையமகன் ஜெய பிரதீப் செய்த மனிதாபிமான உதவி!

திருவண்ணமலை,செப்27; திருவண்ணமலை மாவட்டம், அணைக்கரை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும் கணவன்-மனைவி இவர்களின் ஒரே மகன் ஒரு விபத்தில் இறந்து விட்டான். இவர்கள் கூலி வேலை செய்து கிடைக்கும் வருமானம் வாடகைக்கும் மற்றும் உணவுப் பொருள்களுக்குமே போதவில்லை. இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்த செய்தியைக் கேட்ட தமிழகத்தின் முன்னாள் முதல்வர்  ஓ பன்னீர் செல்வத்தின்  இளைய மகன் ஆன்மீகச் செம்மல் வீ.ப. ஜெயபிரதீப் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டவுடன் அந்த வயதான தாத்தா பாட்டிக்கு அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி செய்தார்.     வீ.ப. ஜெயபிரதீப் அவர்களுக்கு உதவி செய்தவர்கள் மனமுருகி நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள். சுற்றி இருந்தவர்களும் இந்த உதவியை கண்டு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.