வார ராசி பலன்கள் (23.8.2021 முதல் 29.8.2021 வரை) 

வார ராசி பலன்கள் (23.8.2021 முதல் 29.8.2021 வரை) 


மேஷம் 
அஸ்வினி-1,2,3,4, பரணி-1,2,3,4, கார்த்திகை-1 ஆகிய நட்சத்திரப் பாதங்களைக் கொண்டவர்களும் ச,சே,சோ,ல,செ,சை,லி,லு,லே,லோ,சொ,சௌ,அ,ஆ ஆகிய பெயர் எழுத்துக்களை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
 தைரியசாலியாகவும் நட்பு வட்டங்கள் அதிகமாக உள்ளவர்களும் எல்லா காரியங்களையும் சாமர்த்தியமாக செயல்படுத்தும் ஆற்றல் பெற்றவர்களுமான மேஷ ராசிக்காரர்களே! பல வகையான வித்தைகளை கற்றுக் கொள்ளும் திறமை உண்டாகும். சிறந்த தெய்வபக்தி உண்டாகும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நல்ல வளர்ச்சியும், லாபமும் அதிகரிக்கும். கலைத்துறையினர் நல்ல வருமானம் பெறும் சூழல் அமையும். விவசாயத் துறையினர் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும்.தொழில் தொடர்பான வெளியூர் பயணம் அமையும். விலங்கினங்கள் இடம் கவனமாக இருப்பது நன்மை தரும்.குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். செலவுகளுக்கு ஏற்ற வகையில் வருமானம் வந்து மனநிறைவைத் தரும். ஒரு சில காரியங்களில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும் பின்னர் நிவர்த்தி உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். பூர்வீக சொத்து மாற்றம், விற்பனைக்கான முயற்சி நல்ல பலனைக் கொடுக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை.மன சோர்வை தவிர்க்க பணிகளில் விருப்பத்துடன் செயல்படுவது நன்மை தரும்.குழந்தைகள் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும்.மறைமுக எதிரிகள் பகைவர்கள் பணியாட்கள் ஆகியோருடன் அனுசரித்துச் செல்வதால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.புதிய சொத்து சேர்க்கை உண்டாகும்.
 பரிகாரம் 
 துர்க்கை மற்றும் காளி வழிபாடு அதிக நன்மையை கொடுக்கும். சிவப்பு நிற ஆடைகள் தானம் தருவது சிறப்பாகும்.


 ரிஷபம் 
கார்த்திகை-2,3,4,ரோகிணி-1,2,34,மிருகசீரிடம்-1,2 ஆகிய நட்சத்திரப் பாதங்களைக் கொண்டவர்களும் இ,உ,ஏ,ஈ,ஒ,வ,வி,அவாதி,வே,வோ ஆகிய பெயர் எழுத்துக்களை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!கட்டுமஸ்தான உடல் அமைப்பும்,சத்தியம் தவறாமல் செயல்பட கூடியவர்களும், சொத்துக்கள் மீது அதிக விருப்பம் உடையவர்களுமான ரிஷப ராசிக்காரர்களே! நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் ஆற்றலும் தைரியமும் அதிகரிக்கும். வியாபாரம், விவசாயம் தொடர்பானவைகளில் அதிக லாபமும் உண்டாகும். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகளும் வெற்றியும் மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். செல்வ சிறப்பும் வருமானம் அதிகரிக்கும். பயணங்கள் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியைத் தரக் கூடியதாகவும் அமையும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை.பூர்வீக சொத்தில் எதிர்பார்த்த ஆதாயம் தாமதமாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். அரசு வழி ஆதரவும் செல்வாக்கும் அதிகரிக்கும்.வண்டி, வாகன,ஆபரண சேர்க்கையும் புதிய வீடு கட்டுவதற்கான வாய்ப்புகளும் சாதகமாக அமையும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது, பெற்றோர்களுடன் அனுசரித்து செல்வது மிகுந்த நன்மையை கொடுக்கும்.அடிக்கடி இடம் மாற்றம் செய்வதற்கான சூழ்நிலை அமையும். ஆகையால் சிந்தித்து செயல்படுவது மேன்மை தரும். குலதெய்வ வழிபாடு செய்வது புத்திர சம்பத்துக்காக காத்திருப்பவர்களுக்கு சிறப்பைத்தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் ஈடுபாடு அதிகரிக்கும்.திருமணம் தொடர்பான முயற்சிகள் விரும்பியபடி அமையும்.
 பரிகாரம் 
விஷ்ணு வழிபாடு முன்னேற்றத்தைத் கொடுக்கும்.வெள்ளை, மொச்சை மற்றும் கற்கண்டு பிரசாதமாக வழங்குவது சிறப்பாகும்.


 மிதுனம் 
மிருகசீரிடம்-3,4, திருவாதிரை- 1,2,3,4, புனர்ப்பூசம்-1,2,3 ஆகிய நட்சத்திரப் பாதங்களைக் கொண்டவர்களும் கா,கி,கு,க,ஞ,ச,கே,கோ,ஹ ஆகிய பெயர் எழுத்துக்களை கொண்ட மிதுன ராசி அன்பர்களே!இனிமையாக பேச கூடியவர்களும், வார்த்தை ஜாலம் உடையவர்களும், துணைவர்களின் பேச்சிற்கு மதிப்பு கொடுப்பவர்களுமான மிதுன ராசிக்காரர்களே!கவலைகள் காணாமல் போகும் பகை வெல்லும் ஆற்றல் உண்டாகும். எதையும் சாதிக்கும் தைரியம், துணிச்சல் அதிகரிக்கும். மனம் தெளிவுபெறும். நினைத்த செயலை செய்து முடிக்கும் திறமை ஏற்படும். கௌரவம், அந்தஸ்து, புகழ் கூடும். தந்தையுடன் ஒற்றுமை அதிகரிக்கும். தர்ம காரியங்களுக்கு உதவும் வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் வெற்றியாக அமையும். தொழில் வளர்ச்சி, முன்னேற்றம்,லாபம் அதிகரிக்கும். கலைத் துறையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சிற்றின்பங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் மூலம் வருமானம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். சகோதர ஆதரவு அமையாது. அதிகப்படியான கல்வி முயற்சி முன்னேற்றம் தரும். புதிய வீடு கட்டி முடித்து கிரகப் பிரவேசம் செய்யும் வாய்ப்புகள் உண்டாகும்.வண்டி, வாகனம், கால்நடைகள் மூலம் ஆதாயம் அதிகரிக்கும் பூர்வீக சொத்து தொடர்பான முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். தொழில், பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் உண்டாகும். ஒரு சிலருக்கு சொந்தமான தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாகும். உடல் நலம் தொடர்பாக அவ்வப்போது பய உணர்வு இருந்த போதிலும்  அவற்றிலிருந்து நிவர்த்தியாகி மன மகிழ்ச்சி உண்டாகும். எண்ணம் சிந்தனைகள் தொழிலை நோக்கி செயல்பட்டு வெற்றி கிடைக்கும்.
 பரிகாரம்  சப்த கன்னிமார்கள் அமைந்துள்ள ஆலயத்தில் வழிபாடு செய்து சர்க்கரைப்பொங்கல் பச்சை பயிறு பாயாசம் பிரசாதமாக வழங்குவது நன்மைகள் அதிகரிக்கும்.
 

கடகம் 
புனர்ப்பூசம்-4,பூசம்-1,2,3,4, ஆயில்யம்-1,2,3,4 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் ஹ,ஹி,ஹீ,ஹே,க,கை,கொ,கௌ,டி,டு,டே,டோ ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட கடக ராசி அன்பர்களே!
 சாமர்த்தியசாலிகளும், குரு விசுவாசம் உள்ளவர்களும், களத்திரத்துடன் அனுசரித்து செல்லக் கூடியவர்களுமான கடக ராசிக்காரர்களே!வாரத்தின் தொடக்க நாளான திங்கள் செவ்வாய் கிழமை சந்திராஷ்டம தினமாக இருப்பதால் பொறுமையாகவும் அவசரப்படாமல் சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றியை கொடுக்கும் இறைவழிபாடு தியானம் செய்வது மன மகிழ்ச்சியை அதிகப்படுத்தும். தொழில் வருமானம் அதிகரிக்கும். சகோதர உறவுகளுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். திருமண முயற்சிகள் கைகூடும். கல்வியில் மேன்மை உண்டாகும். சொத்துக்களில் எதிர்பார்த்த பலன்கள் தாமதமாகும். உடல்நலத்தில் கவனம் மேற்கொள்ள வேண்டும்.தாயாரின் உடல் நலம் மற்றும் தாய்வழி சொத்துக்களில் செலவுகள் உண்டாகும். விரும்பியபடி வாழ்க்கை அமைந்து மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் முன்னேற்றம் வளர்ச்சி எதிர்கால கனவுகள்  நிறைவேறும். தொழிலில் பொறுப்புகள் அதிகரிக்கும் சாதனைகள் செய்து புகழ் கூடும். புதிய கண்டுபிடிப்புகளும் தொழில் முதலீடுகள் எதிர்பார்த்த பலனை கொடுக்கும்.குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். கல்வியில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் தாமதமாகும். விளையாட்டு உடற்பயிற்சிகளில் ஆர்வம் அதிகமாகும். பணத்திற்கு குறைவு இருக்காது. ஆடம்பர நாட்டம் அதிகரிக்கும். நினைத்ததை சாதிக்கும் தைரியம் உண்டாகும். சொத்து தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். விவசாயம் மற்றும் வியாபாரம் எதிர்பார்த்த லாபமும் முன்னேற்றமும் உண்டாகும்.
 பரிகாரம் 
மாரியம்மன் ஆலயங்களில் வழிபாடு செய்து அரிசிமாவு பிரசாதம் வழங்க வளர்ச்சி முன்னேற்றம் திருப்தி தரும்.

 சிம்மம் 
மகம்-1,2,3,4,பூரம்-1,2,3,4, உத்திரம்-1 ஆகிய நட்சத்திரப் பாதங்களைக் கொண்டவர்களும் ம,மி,மு,மை,மே,மோ,டி,டு,மா,மீ,மௌ,டே ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்டவர்களுமான சிம்ம ராசி அன்பர்களே!
கம்பீரமான தோற்றமும், திடமான மனதும், தைரியம் நிறைந்த செயல்பாடும்  சகலகலா வல்லவர்களாகவும் செயல்படும் சிம்ம ராசிக்காரர்களே! நல்ல ஆரோக்கியமான உடல் நலம் அமையும். சுறுசுறுப்பாக அனைத்து காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும் .முன் கோபத்தை குறைத்துக் கொள்வது மிகுந்த நன்மை உண்டாகும். கண் சம்பந்தமான மருத்துவ ஆலோசனை ஏற்படும். மனிதாபிமானம் உண்டு. கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் வாய்ப்புகள் உருவாகும். திருமணம் தொடர்பான முயற்சிகள் கைகூடி வரும். வருமானம் அதிகரிக்கும். சொத்து சுகங்களுக்கு குறைவு இருக்காது. செய்யும் தொழில், வியாபாரம், உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி உண்டாகும். குடும்ப ஒற்றுமை மேம்படும்.சுயமாக சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். கலைத்துறையினர் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். துணைவர் மூலம் சுகம் உண்டாகும். சமூகத்தில் நல்ல மதிப்பு தோன்றும். வண்டி ,வாகனங்கள் மற்றும் கால்நடைகள் மூலம் நல்ல ஆதாயம் உண்டாகும். வார நாட்களில் புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் தங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதாக கவனமும் நிதானமாக  திட்டமிட்டு செயல்படுவது மிகுந்த வெற்றியை கொடுக்கும். தொழில் முறையில் சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நிவர்த்தியாகும். நினைத்த காரியம் தாமதமாக பலன் தரும். உடன் பணியாற்றுபவர்கள் அனுசரித்துச் செல்வதன் மூலம் கௌரவம் அந்தஸ்து பாதுகாக்கப்படும். சாதுரியமாக செயல்படுவதால் வெற்றியடையலாம்.
 பரிகாரம் 
முனியப்பன் அல்லது ஐய்யனார் கோவிலில் அவல், பொறிகடலை வைத்து படைத்து பிரசாதம் வழங்குவது நன்மையை அதிகரிக்கும்.
 

கன்னி 
உத்திரம்-2,3,4,அஸ்தம்-1,2,3,4,சித்திரை-1,2 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் டோ,ப,பி,டோ,பீ,பூ,உருபூ,பே ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!தருமவான் என பெயர் பெறுபவர்களும் சிறந்த செயல்பாடுகளை கொண்டவர்களும் துணைவருடன் விட்டுக்கொடுத்து செல்பவர்களும் கன்னி ராசிக்காரர்களே!மனோ தைரியம் அதிகரிக்கும். இனிய வார்த்தைகள் பேசி வசீகரிக்கும் தன்மை கூடும். ஆடம்பரப் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்களால் உதவியும் ஆதாயம் கிடைக்கும். வண்டி ,வாகன யோகம் ஏற்படும். சகோதர உதவிகள் தடைபடும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. புத்திரர்கள் செலவுகள் அதிகரிக்கும். சொத்துக்கள் அதிகரிக்கும் .காரியங்களில் தாமதம் ஏற்பட்டு நிவர்த்தி உண்டாகும் .போட்டி பொறாமைகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முன்னோர்கள் வழிபாடு குலதெய்வ வழிபாடு சிறப்பு தரும். அதிகமான செலவுகள் உண்டாகும். பயணங்கள் அதிகரிக்கும். குழந்தை செல்வங்கள் காண முயற்சிகளில் சற்று தாமதமாகும். தங்களின் சேமிப்பு மற்றவர்களும் பயன் உள்ளதாக அமையும். ஆகையால் சுப செலவுகள் செய்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். வெள்ளி சனிக்கிழமைகள் தங்களுக்கு சந்திராஷ்டம தினமாக இருப்பதால் நிதானமாகவும் சிந்தித்து செயல்படுவதன் மூலம் வெற்றி காணலாம். தொழில் தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உண்டாகும். பணியில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு உண்டாகும். சுயதொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் கூடிய லாபங்கள் அதிகரிக்கும்.
 பரிகாரம் 
ஊரின் எல்லை தெய்வம் வழிபாடும், பச்சை வண்ண ஆடைகள் தானம் தருவது முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

 துலாம் 
சித்திரை-3,4,சுவாதி-1,2,3,4,விசாகம்-1,2,3 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் ர,ரி,பை,பௌ,ரு,ரே,ரோ,த,தா,தி,தே ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே! 
நல்ல குணம் மிக்கவர்களும் பொறுமை, புகழ், நல்ல சிந்தனை, சக்தி கொண்டவர்களுமான துலாம் ராசி நேயர்களே! தைரியலட்சுமி தங்களிடம் குடிகொண்டிருக்கும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும். எதிர்ப்புகளை சமாளிக்கும் சாதுர்யம் உண்டாகும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கண்டிப்பான வார்த்தைகள் பேசுவதன் மூலம் சொந்த பந்தங்களுடன் பகை ஏற்படும். ஆனால் அனைவரையும் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை அடையலாம். சகல துறைகளிலும் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். வளர்ச்சி கூடும் பூமி சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். சாதனமாக செயல்படுவதன் மூலம் எதிரிகளின் சூழ்ச்சியால் இருந்து தப்பிக்கலாம். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். கவனமாக பேசுவது நன்மை தரும். தீயவர்களின் சகவாசம் தவிர்ப்பது நல்லது கல்வியில் சிறந்து விளங்கும் சூழ்நிலை அமையும். கௌரவப் பதவிகள் தேடி வரும். திருமண முயற்சி கைகூடி வரும். கலைத்துறையில் கடுமையான முயற்சிக்குப் பின் வெற்றி கிடைக்கும். கடன்கள் அதிகமாகும் சுபவிரயச் செலவுகள் கூடும். உடல் நலத்தில் கவனமாக இருப்பதன் மூலம் ஆரோக்கிய குறைவு உண்டாவதைத் தவிர்க்கலாம். தொழில் யோகம் உண்டாகும். சிலர் தன் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ளும் சூழ்நிலை அமையும். வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமாக செயல்படுவதன் மூலம் வெற்றி காணலாம்.
 பரிகாரம் 
மதுரகாளி அம்மன் வழிபாடும் வெண்பட்டு துணியும் தானம் அளிப்பது நன்மை கிடைக்கும்.

 விருச்சிகம் 
விசாகம்-4,அனுசம்-1,2,3,4,கேட்டை-1,2,3,4 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் தோ,ந,நி,நா,நீ,நு,நே,நோ,ய,யு,நை ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்டவர்களுமான விருச்சிக ராசி அன்பர்களே!அறிவாற்றல் மிக்கவர்களும் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பவர்களும் துணைவர்களின் மீது அதிக பிரியம் உள்ளவர்களுமான விருச்சிக ராசிக்காரர்களே! மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். உடல்நலத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நிவர்த்தியாகும். தொழில் மேன்மையடையும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி பெறும். காரிய சாதனை செய்து புகழ் பெறும் வாய்ப்புகள் உருவாகும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். தொழில் முன்னேற்றம் அதிகரித்து அதன் மூலம் வருமானம் அதிகரிக்கும். உத்தியோக உயர்வு, கௌரவம், புகழ், அந்தஸ்து உயரும். தர்ம காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். திடீர் யோகம் சொத்து சேர்க்கை, வண்டி, வாகன சேர்க்கை ஏற்படும். கல்வி கேள்விகளில் சிறந்த பயிற்சி அமையும். வெளியூர் பயணங்கள் நன்மை தரும். வீடு கட்டும் யோகம் உண்டாகும். தைரியம் துணிச்சல் உண்டு .அனுசரித்து செல்வது ஒற்றுமை அதிகரிக்கும் உடல் நலம் சீராகும் சொத்துக்கள் வாங்குவதற்கான கடன் கேட்ட இடத்தில் தடங்கல் இல்லாமல் கிடைக்கும் கையாள்வதன் மூலம் சேமிப்பை அதிகப்படுத்த முடியும்.
 பரிகாரம் 
முருகன் வழிபாடும் சிவப்பு நிற புள்ளிகள் தானம் வழங்குவதும் வாழ்க்கையின் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.

 தனுசு 
மூலம்-1,2,3,4,பூராடம்-1,2,3,4,உத்திராடம்-1 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் யே,யோ,ப,பி,பு,பூ,த,ப,ட,பே ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!நற்குணம் மிக்கவர்களும் சத்தியவான்களும் அயல்நாடுகளுக்கு செல்வதில் ஆர்வம் மிக்க வர்களுமான தனுசு ராசி நேயர்களே! செல்வாக்கு முன்னேற்றம் வளர்ச்சி அதிகரிக்கும். இட மாற்றங்கள் நிகழும் உறவினர் நண்பர்களுடன் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் விருப்பங்கள் நிறைவேறும். தாய் தந்தையின் உடல்நலம் மற்றும் அவர்களுடன் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் அனுசரித்து செல்வது நன்மையாகும். தீய சகவாசத்தை தவிர்ப்பது நீச்சல் செலவுகளைக் குறைப்பதும் சேமிப்புகளை அதிகப்படுத்தும் திருமண முயற்சிகள் தாமதமாகி கிடைக்கும். ஒவ்வொரு செயல்பாடுகளும் முன்னேற்றத் தடைகள் ஏற்பட்டால் போராடி வெற்றி பெறும் நிலை உண்டாகும். பிறந்த ஊரைவிட்டு வெளி இடங்களில் வசிக்கும் வாய்ப்புகள் உருவாகும் .சகோதர ஒற்றுமை ௳தவிகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவது சிறப்பைத்தரும். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் அதிகரித்தாலும் அதை தவிர்த்துவிட்டு நேர்வழியில் செல்வதை நிம்மதியை கொடுக்கும். மிகவும் சாமர்த்தியமாக பேசும் திறமையும் காரியம் சாதிக்கும் ஆற்றலும் தந்திரமாக பேசி வியாபாரத்தை  முடிக்கும் சாதுரியமும் தங்களை வாழ்க்கையில் மேன்மை அடையச் செய்யும்.
 பரிகாரம் 
 குரு தட்சிணாமூர்த்தி வழிபாடும் கொண்டைக்கடலை பிரசாதமும் முன்னேற்றத்தை அதிகப்படுத்தும்.

 மகரம் 
உத்திராடம்-1,2,3,4, அவிட்டம்-1,2,திருவோணம்-1,2,3,4 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் ஜ,ஜா,ஜி,ஜே,ஜோ,க,கா,கீ ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட மகர ராசி அன்பர்களே! வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ளவர்களும், திடமான புத்திசாலிகளாகவும், பிடிவாத குணம் நிறைந்தவர்கள் மகர ராசிக்காரர்களே! குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் வாழ்வினை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் உண்டாகும். சிறந்த கல்வி, கேள்வி, ஞானம் ஏற்படும். தன்னுடைய கருத்துக்களை வெளியிட தயக்கம் மற்றும் சங்கோஜம் உண்டாகும். மனை, வீடு,  வாகன யோகம் ஏற்படும்.  பல மொழிகள் கற்றுக் கொள்ளும் ஆற்றல் உண்டு கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வெற்றி வாய்ப்பும் ஈடுபாடும் அதிகரிக்கும் பொருள் தட்டுப்பாடு குறையும். நண்பர்களிடத்தில் செல்வாக்கு புகழ் அதிகமாகும். வியாபாரம் மற்றும் விவசாயத்தில் வருமானங்கள் அதிகரிக்கும். குழந்தைகள் தொடர்பான முயற்சி வெற்றி பெறும். தாய் மாமன் வழி உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செய்வதன் மூலம் குடும்ப அமைதி ஏற்படும். வண்டி வாகனங்களில் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் செல்வது பாதுகாப்பை அதிகரிக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை .கணவன்-மனைவிக்குள் மனக்கசப்பை உருவாகாமல் இருக்க வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும் பேரும் புகழும் உண்டாகும். சங்கீதத்தில் நாட்டம் அதிகரிக்கும். திருமண வயதில் உள்ளவர்களின் முயற்சிக்கு நல்ல செய்திகள் வந்துசேரும். இறைவழிபாடுகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். ஒவ்வொரு செயலுக்கும் பிரதிபலனை எதிர்பார்த்து செயல்படும் வாய்ப்புகள் உண்டாகும்.
 பரிகாரம் 
 கருப்பனார் வழிபாடும், எள்ளுருண்டை பிரசாதமும், சிமெண்ட் கலர் துணி தானமும் சிறப்பாகும்.

 கும்பம் 
அவிட்டம்-3,4,சதயம்-1,2,3,4,பூரட்டாதி-1,2,3 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் கு,கூ,ஞ,ஞா,கோ,கே,ஸ,ஸி,தோ,ந,தௌ,ஸே,ஸோ,த ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே!
 திட சித்தம் உள்ளவர்களும் தன்னையே புகழ்ந்து பேசுவதில் மகிழ்ச்சி கொள்பவர்களும் பெருத்த சரீரம் கொண்டவர்களுமான கும்ப ராசி நேயர்களே! உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வருமானங்கள் இரண்டு மடங்கு அதிகரிக்கும். தைரியம் துணிச்சல் உண்டாகும். புதிய சொத்துகளில் முதலீடு செய்யும் வாய்ப்புகள்  வந்து கதவை தட்டும். எதிலும் அவசரம் காட்டுவதைத் தவிர்க்கவும். ஆலய பணிகளுக்கு உதவிகள் செய்யவும், முன்னின்று செயல்படவும் சூழல் அமையும். அலைச்சல் அதிகரிக்கும். வயிறு தொடர்பான உபாதைகள் வந்துபோகும். கணவன்-மனைவிக்குள் பிரிவினைகள் ஏற்படாமல் இருக்க மனம் விட்டு கலந்து பேசி முடிவுகள் எடுப்பது நன்மை தரும். துணைவரின் உடல் நலத்தில் கவனம் தேவை. உறவினர்கள் நண்பர்கள் வகையில் விட்டுக்கொடுத்து செல்வது ஒற்றுமையை அதிகப்படுத்தும். வியாபாரத்தை கவனமாக மேற்கொள்வதன் மூலம் தொழில்நுட்பங்களை தவிர்க்க முடியும். திருமண வயதினருக்கு விரும்பிய வகையில் வரன் அமையும். வேலைவாய்ப்பு தொடர்பாக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் தொழில் அமைந்து மகிழ்ச்சியை அதிகப்படுத்தும். தொழில் வகையில் இடமாற்றம் தொடர்பான முயற்சிகளுக்கு நல்ல பலன்கிடைக்கும். சொத்துக்கள் மற்றும் வண்டி வாகன பராமரிப்பு செலவுகள் உண்டாகும். 
 பரிகாரம் 
 பைரவர் வழிபாடும், கலவை சாதம் பிரசாதமும், நீலக்கலர் துணியும் தானம் செய்வது தொழில் முன்னேற்றத்தை கொடுக்கும்.

 மீனம் 
பூரட்டாதி-4,உத்திரட்டாதி-1,2,3,4,ரேவதி-1,2,3,4 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் தா,தீ,து,நோ,நௌ,ஞ,ஞா,தே,தோ,சா,சி,சீ ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட மீன ராசி அன்பர்களே!
 பெரியோர்களிடத்தில் பக்தியும் விசுவாசமும் உள்ளவர்களும் ஞானம் பெறுவதில் ஆர்வம் கொண்டவர்கள் செலவுகள் செய்வதில் தாராள மனம் கொண்டவர்களுமான மீன ராசி நேயர்களே! ஆன்மிக பயணங்கள் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியை அதிகப்படுத்தும் வகையில் அமையும். வீடு மனை, வண்டி வாகனம் வாங்குவதற்கான செலவுகள் அதிகரிக்கும். துணைவர் வழி உதவிகளும் சொத்து சேர்க்கையும் ஏற்படும். பூர்வீகம் தொடர்பான பிணிகள் விலகும். பகைவர்கள் வீழ்ச்சி அடைவதால் வழக்குகள் வெற்றி பெறும் கடன்கள் விரைவில் அடைபடும். தைரியம் அதிகமாகும். சகல துறைகளிலும் வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக அமையும். போட்டிப் பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். மறைமுகப் பகை ஏராளமாக இருந்தாலும் பகை வெல்லும் ஆற்றல் உண்டாகும். பித்தம் தொடர்பான உபாதைகள் வந்து போகும். வரன் தேடுபவர்களுக்கு  வசதி வாய்ப்புகள் அதிகம் உள்ள இடத்திலிருந்து வரன் அமையும். கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். புத்திரம் தொடர்பான தடைகள் படிப்படியாக நிவர்த்தியாகும். தொட்ட காரியங்கள் நிறைவேறும் தொழிலில் ஏற்பட்ட விரயங்கள் விரைவில் சரி செய்யப்படும். மனதில் ஒரு சில  சமயங்களில் பய உணர்வு இருந்தாலும் இறைவழிபாட்டின் மூலம் நிவர்த்தி அடையலாம்.
 பரிகாரம் 
 ஆஞ்சநேயர் வழிபாடும் மஞ்சள் நிற ஆடைகள் தானம் தருவதும் குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும்.
 

வளம் தரும் வாஸ்து குறிப்புகள் 
1) வீட்டின் சமையல் அறை தென் கிழக்குப் பகுதியில் அமையவேண்டும். தெற்கு வாசல் அமைப்பு உள்ள வீட்டில் அந்த வாய்ப்பு இல்லாத நிலையில் வடமேற்கில் அமைக்கலாம். இவற்றைத் தவிர மற்ற பகுதிகளில் இடம்பெறக்கூடாது.
2) தென்மேற்கு மூலையில் ஆழ்குழாய் கிணறு, போர்வெல், நிலத்தடி நீர் தொட்டி, செப்டிக் டேங்க் போன்றவை கண்டிப்பாக அமைக்க கூடாது.
3) வீட்டில் பெட்ரூம் அமைக்கும்போது குடும்பத் தலைவருக்கு தென்மேற்கிலும், மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு தெற்கு மற்றும் மேற்கு பகுதியிலும் அமைக்க வேண்டும். விருந்தினர்களுக்கு வடமேற்கு அறை ஒதுக்க வேண்டும். தென் கிழக்கிலும் வட கிழக்கிலும் பெட்ரூம் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.
4) முக்கோணம் போன்ற அமைப்பில் மனைகள் கட்டக்கூடாது அதுபோன்ற மனைகள் குடியிருப்பு இருப்பதற்கு ஆகாது கடைகளுக்கு சிறப்பைத் தராது. ஒரு சில டீ கடை, ஹோட்டல், பேக்கரி, காபி பார் போன்றவைகளுக்கு சுமாரான பலனை கொடுக்கும்.
5)தலைவாசலுக்கு நேர்  எதிரில் தண்ணீர் தொட்டி, செப்டிக் டேங்க், மரங்கள், தூண்கள் இல்லாமல் இருக்க வேண்டும். மீறி இருந்தால் குடும்பத்தில் அதிகமான பிரச்சனைகளை சந்திக்கும் சூழ்நிலை உண்டாகும்.
6) கிழக்கு, மேற்காக இரண்டு வீடுகள் இருக்கும் பொழுது மேற்கு பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளர்கள் இருந்துகொண்டு கிழக்குப்பகுதியில் உள்ள வீட்டை வாடகைக்கு கொடுக்க வேண்டும்.
7) தெற்கு, வடக்காக 2 வீடுகளாக உள்ளவர்கள் தெற்கு பகுதியில் வீட்டின் உரிமையாளரும், வடக்கு பகுதியை வாடகைக்கும் விடுவதால் மிக நல்ல பலன்கள் கிடைக்கும்.
8) மேல் கூரையில் தெற்கு மேற்கு பக்கங்களில் சரிவாக அமைக்கக்கூடாது.
9) மேற்கூரையில் வடக்கு கிழக்கு பக்கங்களில் சரிவாக கூரை அமைக்கலாம்.
10) கட்டிடத்தில் ஒற்றைப்படையில் பீம்களோ தூண்களோ இருக்கக்கூடாது இவைகள் அனைத்தும் இரட்டை படையில் இருக்க வேண்டும்.
11) வீட்டில் உள்ள ஜன்னல்கள் கதவுகள் இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும். ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்கக்கூடாது.
12) வீட்டில் அமைக்கப்படும் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று குத்தல் இல்லாமல் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.