கொடநாடு விவகாரம்: ஆளுநருடன் இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திப்பு !

கொடநாடு விவகாரம்: ஆளுநருடன் இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திப்பு !

சென்னை ஆக 19:தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியார், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்திக்கவுள்ளனர். நண்பகல் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர். இதில் கொடநாடு விவகாரத்தை திமுக மீண்டும் விசாரணைக்கு எடுத்தது குறித்து ஆளுநரிடம் பேசவுள்ளனர். 

கொடநாடு வழக்கு முடியவுள்ள நிலையில், தங்களது பெயர்களுக்கு களங்கள் விளைவிக்கும் வகையில் சதி நடப்பதாக ஆளுநரை சந்தித்து இபிஎஸ் - ஓபிஎஸ் முறையிட உள்ளனர். சட்டப்பேரவையை இரண்டு நாள்களுக்கு புறக்கணிக்கப்போவதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில், இருவரும் ஆளுநரை சந்திக்கவுள்ளனர்.