வார ராசி பலன்கள் (16.8.2021 முதல் 22.8.2021 வரை )

வார ராசி பலன்கள் (16.8.2021 முதல் 22.8.2021 வரை )

 

மேஷம்
அஸ்வினி-1,2,3,4, பரணி-1,2,3,4, கார்த்திகை-1 ஆகிய நட்சத்திரப் பாதங்களைக் கொண்டவர்களும் ச,சே,சோ,ல,செ,சை,லி,லு,லே,லோ,சொ,சௌ,அ,ஆ ஆகிய பெயர் எழுத்துக்களை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
சுறுசுறுப்பாக செயல்படுவதும் பயணங்கள் செய்வதில் விருப்பங்கள் கொண்டவர்களும் நண்பர்கள் வட்டம் அதிகம் கொண்டவர்களுமான மேஷ ராசிக்காரர்களே... 

 வாரத்தின் தொடக்க நாட்களான திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் தங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் தினமாக இருப்பதால் கவனமாக செயல்பட வேண்டும். உடல்நலத்தில் அக்கறை தேவை. மனம் அலைபாயும் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் ஏற்படாமலிருக்க சிந்தித்து ஆலோசனை கேட்டு செயல்படுவது வெற்றியை தரும். ஆன்மீக பயணம் சந்தோஷத்தைக் கொடுக்கும் தொழில் வளர்ச்சி படிப்படியான முன்னேற்றத்தை கொடுக்கும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் தொழில் முயற்சி செய்பவர்களுக்கு முயற்சிக்கான பலன் கிடைக்கும் பிள்ளைகளுக்கான செலவினங்கள் அதிகரிக்கும் கையிருப்பு சேமிப்புகள் கரையும் சுபவிரயச் செலவாக செய்துகொள்வது மகிழ்ச்சி தரும். துணைவரின் உடல் நலத்தில் அக்கறை யும் அவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம் கூட்டுத் தொழில் மற்றும் கூட்டாளிகளுடன் கவனமாக செயல்படுவதன் மூலம் நகங்களை தவிர்க்கலாம் விவசாயம் மற்றும் வியாபாரம் தொடர்பான பணிகளில் அதிருப்தி உண்டாகும்.
பரிகாரம் :
அய்யனார் வழிபாடும் சர்க்கரை பொங்கல் பிரசாதம் கொடுப்பதன் மூலமும் நன்மைகள் அதிகரிக்கும்.


ரிஷபம்
கார்த்திகை-2,3,4,ரோகிணி-1,2,34,மிருகசீரிடம்-1,2 ஆகிய நட்சத்திரப் பாதங்களைக் கொண்டவர்களும் இ,உ,ஏ,ஈ,ஒ,வ,வி,அவாதி,வே,வோ ஆகிய பெயர் எழுத்துக்களை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
 சுவையான உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்களும் வாசனை திரவியங்களை அதிகம் பயன்படுத்தக்கூடியவர்களுமான ரிஷப ராசிக்காரர்களே! உடல்நலத்தில் கவனமும் அக்கறையும் தேவை சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது வருமானங்கள் அதிகரிக்கும் நட்பு வட்டங்களுடன் சிறிய அளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும் வாரநாட்களில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் என்பதால் அந்த நாட்களில் கவனமாக செயல்படுவது மிகுந்த நன்மையை தரும் சொத்துக்கள் வாங்குவது தொடர்பான முயற்சிகள் நல்ல பலனைக் கொடுக்கும் பூர்வீக சொத்து விற்பது மற்றும் பராமரிப்பது தொடர்பான முயற்சிக்கு உரிய பலன் கிடைக்கும்.
தொழில் சார்ந்த பயணங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும் .திருமண வயதில் உள்ளவர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ற வரன் அமைந்து சந்தோஷப்படுவார்கள். நிலம் ,மனை வாங்கும்.முயற்சிகள் வெற்றி பெறும். ஆடு-மாடு கால்நடைகள் மற்றும் வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தைரியம், துணிச்சல் அதிகரிக்கும் தொழில் சார்ந்த முதலீடுகள் அதிகரிக்கும் .மனம் சஞ்சலம் ஏற்படும் போது இறைவழிபாடு செய்வதும் தியானம் செய்வதும் மன தைரியத்தை அதிகரிக்கும். தந்தை வழி பாட்டன், பாட்டி ஆகியோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் வளர்ச்சி முன்னேற்றம் உண்டாகும். அலர்ஜி தொடர்பான உணவுகளை தவிர்ப்பது நன்மையாகும். 


பரிகாரம் 
மகாலட்சுமி வழிபாடு இனிப்புகள் பிரசாதமாக வழங்குவதன் மூலம் ஆரோக்கியம் மேம்படும்.


மிதுனம் 
மிருகசீரிடம்-3,4, திருவாதிரை- 1,2,3,4, புனர்ப்பூசம்-1,2,3 ஆகிய நட்சத்திரப் பாதங்களைக் கொண்டவர்களும் கா,கி,கு,க,ஞ,ச,கே,கோ,ஹ ஆகிய பெயர் எழுத்துக்களை கொண்ட மிதுன ராசி அன்பர்களே! 
நகைச்சுவை உணர்வுடன் பேச்சுத் திறமையும் விகடகவி என்று அழைப்பதற்கு பொருத்தமானவர்களுமான மிதுன ராசி நேயர்களே..!தைரியம் துணிச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கடன்கள் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும். சொத்துக்கள் வண்டி, வாகனம் விற்பனை தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும்.பிள்ளைகள் வழி செலவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்து மாற்றியமைக்கும் வாய்ப்புகள் வந்து சேரும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். துணைவர் மற்றும் கூட்டாளிகள் மூலம் உதவிகளும் ஆதாயமும் உண்டாகும். சகோதர உறவு வழி பிரச்சனைகள் விரைவில் தீரும். நிலையான சொத்துக்கள் வாங்குதல், கட்டிடம் கட்டுதல் போன்ற சுப விரையச் செலவுகள் அதிகரிக்கும். வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்கள் தங்களுக்கு சந்திராஷ்டம தினமாக இருப்பதால் கவனமாக செயல்பட வேண்டும். கொடுக்கல் வாங்கல் மற்றும் வரவு செலவுகளில் கவனம் தேவை .தொழில் வளர்ச்சி முன்னேற்றம் அதிகரிக்கும் புதிய சொத்துக்கள் புதிய தொழில்களுக்கான முதலீடுகள் அதிகமாகும். மனசஞ்சலம் அவ்வப்போது ஏற்பட்டாலும் இறை வழிபாடு செய்வதன் மூலம் நிவர்த்தியாகும். வேலைகளில் கவனம் செலுத்தி செயல்படுவதன் மூலம் பாராட்டுகளும் பதவி உயர்வும் கிடைக்கும். தொழிலில் இடமாற்றத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு விரும்பியபடி இடமாறுதல் கிடைக்கும்.

பரிகாரம் 
விஷ்ணு வழிபாடும் பச்சைப்பயிறு பிரசாதம் மற்றும் தானம் கொடுப்பதும் சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும்.

கடகம் 
புனர்ப்பூசம்-4,பூசம்-1,2,3,4, ஆயில்யம்-1,2,3,4 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் ஹ,ஹி,ஹீ,ஹே,க,கை,கொ,கௌ,டி,டு,டே,டோ ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட கடக ராசி அன்பர்களே!
பேச்சுத்திறமை மிக்கவர்களும் அன்பிற்கும் பாசத்திற்கும் கட்டுப்பட்டவர்களும் திறமையாக செயல்பட்டு வெற்றியை நிலைநாட்டும் கடக ராசி நேயர்களே! நிர்வாகப் பொறுப்புகள் அதிகமாகும். தொழில் மூலம் வருமானங்கள் வந்து சேரும். குழந்தைகளின் கல்வி செலவுகள் அதிகரிக்கும். சொத்துக்கள் விற்பனை தொடர்பான முயற்சிகள் வெற்றிபெறும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை .கூட்டாளிகள் மற்றும் உடன் பணியாற்றுபவர்கள் உடன் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவீர்கள்.தங்களின் கவர்ச்சிகரமான பேச்சுத் திறமையால் அனைவரிடமும் பாராட்டு பெறுவீர்கள் கௌரவப் பதவிகள் தேடி வரும் கலைத்துறையில் உள்ளவர்கள் சாதனை படைப்பார்கள் வயிறு தொடர்பான உபாதைகள் சோம்பலும் ஏற்படாமல் இருக்க சத்தான உணவுகளை பயன்படுத்துவது நன்மையே தரும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு விரும்பியபடி வரன் அமைந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தும் தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையுடனும் கவனமாகவும் செயல்படுவதன் மூலம் நன்மையை அடைய முடியும் சகோதர வழி செலவுகள் அதிகரிக்கும். 

பரிகாரம் 
திரௌபதி அம்மன் அல்லது மதுரகாளி அம்மன் வழிபாடும் அரிசி மாவு பிரசாதம் சர்க்கரை பொங்கல் பிரசாதம் கொடுப்பது மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம் 
மகம்-1,2,3,4,பூரம்-1,2,3,4, உத்திரம்-1 ஆகிய நட்சத்திரப் பாதங்களைக் கொண்டவர்களும் ம,மி,மு,மை,மே,மோ,டி,டு,மா,மீ,மௌ,டே ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்டவர்களுமான சிம்ம ராசி அன்பர்களே! அதிகார தோரணையும் நிர்வாக திறமையும் கருணை உள்ளமும் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே..

ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை வருமானத்தைவிட செலவுகள் அதிகரிக்கும் மன தைரியம் குறையும் தேவையற்ற மனக் குழப்பங்களைத் தவிர்க்க மற்றவர்களுடன் கலந்து ஆலோசித்து செயல்படுவது மிகுந்த நன்மை கொடுக்கும் சகோதர வழி செலவுகள் கூடும் தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி வெற்றி பெறுவதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும் வண்டி வாகன சேர்க்கை ஏற்படும் கௌரவம் அந்தஸ்து புகழ் கூடும் திருமண முயற்சிகள் சிறிய தடைகளுக்குப் பின் நிவர்த்தியாகும் கல்வியில் போட்டிகள் அதிகரிக்கும் பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைக்கும் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும் தொழில் போட்டிகள் அதிகரிக்கும் தொழிலை திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் தேவையற்ற விரையங்களை தவிர்க்கலாம் தொழிலில் இடமாற்றங்கள் உண்டாகும் ஏற்கனவே இருந்த புதிய பணிக்கு மாறுதல் சூழ்நிலை உருவாகும் புதிய தொழில் முதலீடுகளை தவிர்ப்பது நன்மை தரும் கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்து செல்வது ஒற்றுமையை அதிகப்படுத்தும் போராடி வெற்றிபெறும் காலமாக இருப்பதால் பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்படுவது மிகுந்த நன்மையை உண்டாக்கும். 

பரிகாரம் 
முனியப்பன் அல்லது ஊரின் எல்லை தெய்வ வழிபாடும் ஆரஞ்சு நிற ஆடைகள் தானம் கொடுப்பதும் மகிழ்ச்சியைத் தரும்.

கன்னி  
உத்திரம்-2,3,4,அஸ்தம்-1,2,3,4,சித்திரை-1,2 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் டோ,ப,பி,டோ,பீ,பூ,உருபூ,பே ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

கலகலப்பாகவும் இரு பொருள்பட பேசுவதில் கெட்டிக்காரர்கள் ஆகவும் செயல்படும் கன்னி ராசிக்காரர்களே... நினைத்ததைச் செய்து முடிக்கும்  உத்வேகம்   இருந்தாலும் ஒரு சில தடைகள் வந்து தாமதப்படுத்தும். வருமானங்கள் ஏதேனும் ஒருவகையில் கரைந்தாலும் அவற்றை சுபவிரையச் செலவுகளாக மாற்றிக் கொள்வது நன்மையாகும். சகோதர வழி உதவிகள் ஏமாற்றம் தரும். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை சொத்துக்கள் வாங்குவதற்கும் பராமரிப்பதற்கும் தொழில் முதலீடு செய்வதற்கும் நகை கடன் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும் தந்தையின் உடல்நலம் மற்றும் தந்தை வழி சொத்துக்களில் கவனம் தேவை தொழில் முன்னேற்றம் எதிர்பார்த்த வகையில் இருக்கும் தொழில்முறை பயணங்களால் ஆதாயம் உண்டு தொழிலில் இடமாற்றங்கள் ஏற்படும் கல்வி தொடர்பான முயற்சிகள் வெற்றி கிடைக்கும் வாகன யோகம் உண்டாகும் வாகனப் பராமரிப்புச் செலவுகள் ஏற்படும் குடும்ப ஒற்றுமை மேம்பட விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும் தொழில் போட்டிகள் இருந்தபோதும் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றிகள் கிடைக்கும் திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும் புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும். 

பரிகாரம் 
லட்சுமி நரசிம்மர்  பெருமாள் வழிபாடும் பச்சை வண்ண ஆடைகள் தானம் கொடுப்பதும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

துலாம் 
சித்திரை-3,4,சுவாதி-1,2,3,4,விசாகம்-1,2,3 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் ர,ரி,பை,பௌ,ரு,ரே,ரோ,த,தா,தி,தே ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே! 

நீதிமானாக இருந்து சரியான முடிவுகள் எடுக்கும் வல்லமையும் வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை அறிந்து அதற்கேற்ற வகையில் செயல்புரிய கூடியவர்களும் ஆன துலாம் ராசி நேயர்களே! முயற்சிக்கு ஏற்ற வகையில் முன்னேற்றம் இருக்கும். வருமானங்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை சீர்படும். தைரியம், துணிச்சல் அதிகரிக்கும். சகோதர ஒற்றுமை மற்றும் உதவிகள் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் வந்து கதவை தட்டும். கால்நடைகள் மற்றும் வாகன சேர்க்கை மகிழ்ச்சியை உண்டாக்கும். தாயாருடன் உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியிடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். எதையும் முன்னின்று செயல்படுத்த சற்று தயக்கம் ஏற்படும் . வாழ்க்கைத் துணையுடன் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை தரும்.தொழில்  முயற்சிகள் பயனுள்ளதாக அமையும். ஆன்மிக பயணங்களால் ஆத்ம திருப்தி உண்டாகும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு சுபச் செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் உண்டாக வாய்ப்பு உண்டாகும். தொழில் துறையில் உள்ள நபர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

பரிகாரம் 
 சப்தகன்னியர் வழிபாடும், சுமங்கலி பெண்களுக்கு  மஞ்சல் குங்குமம் ஆடைகள் தானம் வழங்குவதால் முன்னேற்றம் உண்டாகும்.
 

விருச்சிகம் 
விசாகம்-4,அனுசம்-1,2,3,4,கேட்டை-1,2,3,4 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் தோ,ந,நி,நா,நீ,நு,நே,நோ,ய,யு,நை ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்டவர்களுமான விருச்சிக ராசி அன்பர்களே! புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வம் உள்ளவர்களும், பிரபஞ்ச ஆற்றலை உள்ளுணர்வால் அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவருமான விருச்சிக ராசி நேயர்களே! மனதில் இருந்து வந்த சலனங்கள் விலகும். எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் தைரியம் துணிச்சல் உண்டாகும். வருமானங்கள் வந்து சேரும் கல்வி தொடர்பான முயற்சிகள் வெற்றிபெறும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். சகோதர வழி சொத்து பிரச்சனை சுமூகமாக முறையில் தீர்க்கப்படும். புதிய மனை, வீடு, நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் வந்து வாசல் கதவைத் தட்டும். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும்.தொழிலில் புதிய முதலீடுகள் வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டு. வேலை தேடும் நிலையில் இருப்பவர்களுக்கு நிலையான உத்தியோகம் அமையும். உடன் பணியாற்றுபவர்கள் பாராட்டும் வாழ்த்துக்களும் கிடைக்கப்பெறும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியை கொடுக்கும். திருமண வயதினரின் தேடுதல் நல்ல பலன் தரும். தந்தையுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகளுக்கு நிவர்த்தி கிடைக்கும். வாழ்க்கை துணையின் மூலம் செலவுகள் அதிகமாகும். தொழில் கூட்டாளி நண்பர்களுடன் விட்டுக்கொடுத்து செல்வதனால் நன்மை உண்டாகும்.

பரிகாரம் 
முருகன் வழிபாடு துவரம்பருப்பு தானம் மற்றும் சிவப்பு நிற ஆடைகள் தானம் கொடுப்பதும் சிறப்பான வளர்ச்சியை ஏற்படுத்தும்.


 தனுசு 
மூலம்-1,2,3,4,பூராடம்-1,2,3,4,உத்திராடம்-1 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் யே,யோ,ப,பி,பு,பூ,த,ப,ட,பே ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! போதிக்கும் ஆற்றலும் சிறந்த வழிகாட்டியாகவும் நிர்வாகத் திறமையும் கொண்ட தனுசு ராசிக்காரர்களே! குலதெய்வ வழிபாட்டில் இருந்து வந்த தடைகள் நீங்கும் .ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத செலவினங்களினால் தடு மாற்றம் ஏற்பட்டாலும் சமாளிக்கும் தைரியம், துணிச்சல் உண்டாகும். எண்ணம், சிந்தனைகளில் குழப்பங்கள் ஏற்பட்டு நிவர்த்தியாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். தொழிலில் கவனம் தேவை. கடன்கள் கட்டி முடிக்கும் சூழல் உண்டாகும் .தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். திருமண முயற்சிகளுக்கான தகவல் சற்று தாமதமாகும். போட்டி பந்தயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் பங்கு சந்தை தொடர்பான வியாபாரங்களில் கவனம் தேவை. பழைய சொத்துக்கள் மற்றும் வண்டி, வாகனம் ஆகியவற்றை புதுப்பிக்கும் முயற்சிகள் கைகூடிவரும். பூர்வீக சொத்துகளால் நன்மை உண்டாகும். பிள்ளைகளால் பெருமையும் அவர்களின் வளர்ச்சி குறித்து செலவுகள் செய்வதால் சந்தோஷம் உண்டாகும். இடமாற்றங்கள் தொடர்பான முயற்சிகளுக்கு பலன் உண்டு. பயணங்களில் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த தடைகள் நிவர்த்தியாகி போதுமான அளவிற்கு வருமானங்கள் வந்து சேரும். 

 பரிகாரம் 
ஐயனார் வழிபாடும் மஞ்சள் நிற ஆடைகள் தானம் கொடுப்பதும் வியாபார வளர்ச்சி உண்டாகும்.
 

மகரம் 
உத்திராடம்-1,2,3,4, அவிட்டம்-1,2,திருவோணம்-1,2,3,4 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் ஜ,ஜா,ஜி,ஜே,ஜோ,க,கா,கீ ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட மகர ராசி அன்பர்களே! பிடிவாத குணமும் சிக்கனமும் காரியம் சாதிக்கும் திறமையும் கொண்ட மகர ராசிக்காரர்களே! உடல்நலம் ஆரோக்கியம் மேம்படும் அலைச்சல் அதிகமாக இருக்கும். வருமானத்திற்கு தகுந்த செலவுகள் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தைரியம், துணிச்சல் அப்போது குறையும். எதிர்பார்த்த காரியம் தாமதம் ஏற்படுவதால் மனதில் சஞ்சலம் உண்டாகும். விரைவில் தடைகள் நீங்கி நினைத்த காரியம் நிறைவேறும் .திருமண தடையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டு. கொடுக்கல்-வாங்கல் நன்றாக இருக்கும். பய உணர்வுகள் மேலோங்கும். பூர்வீக சொத்து விற்பனைக்கான முயற்சிகள் வெற்றிகள் உண்டாகும். தந்தை வழி, பாட்டன், பாட்டி ஆகியோரின் உடல் நலத்தில் கவனம் தேவை. சொத்து மற்றும் வண்டி வாகனங்களுக்கான செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் வருமானங்களும் சொத்து சேர்க்கையும் ஏற்படும். தொழிலில் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் தேவையற்ற விரயங்களை தவிர்க்கலாம். தொழில் மாற்றம் உண்டாக வாய்ப்புகள் உண்டு. புதிதாக தொழில் தொடங்க முயற்சிகள் தாமதம் ஏற்படும் ஆகையால் சிந்தித்து செயல்படுவதன் மூலம் வெற்றி அடையலாம்.

 பரிகாரம் 
கருப்பு சாமி வழிபாடு அன்னதானம் மற்றும் கருப்பு நிற ஆடைகள் தானம் தருவது மிகுந்த நன்மையை ஏற்படுத்தும்.

கும்பம் 
அவிட்டம்-3,4,சதயம்-1,2,3,4,பூரட்டாதி-1,2,3 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் கு,கூ,ஞ,ஞா,கோ,கே,ஸ,ஸி,தோ,ந,தௌ,ஸே,ஸோ,த ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே! வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவார்கள் தன்னுடைய கருத்தை சிறந்தது என்று எண்ணி வாதாட கூடியவர்களும் ஆன கும்ப ராசி நேயர்களே! நினைத்ததைச் செய்து முடிக்கும் ஆற்றலும் தைரியமும் அதிகரிக்கும். உடல் நலம் சிறப்பாக அமையும். தொழிலை மிக கவனமாக செய்து ஆதாயம் பெறும் அமைப்பு உண்டாகும். உணவு பொருள் தொடர்பான வற்றில் நல்ல லாபம் கிடைக்கும். விவசாயம் செய்பவர்களுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். கலைத்துறையில் தன் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் அமையும். ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வருமானம் மனநிறைவைத் தரும். திருமண முயற்சிகள் நல்ல பலனை தரும். விரும்பியவருடன் திருமணம் நடைபெறும் .குழந்தைகளின் வளர்ச்சி முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். ஆன்மிக பயணங்கள் இறை வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கல்வியில் ஈடுபாடும் ஆர்வமும் அதிகரிக்கும் .வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வாரக்கடைசியில் செலவுகள் அதிகரிக்கும். தொழில் தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் சொந்தமாக தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாகும். ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் ஏற்படும்.

பரிகாரம் 
 ஐயப்பன் வழிபாடும் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லங்களுக்கு உணவு மற்றும் ஆடை தானம் தருவது வளர்ச்சியை உண்டாக்கும்.

 மீனம் 
பூரட்டாதி-4,உத்திரட்டாதி-1,2,3,4,ரேவதி-1,2,3,4 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் தா,தீ,து,நோ,நௌ,ஞ,ஞா,தே,தோ,சா,சி,சீ ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்ட மீன ராசி அன்பர்களே!
நியாயம் தர்மத்தை கடைபிடிக்க கூடியவர்களும், இளகிய மனம் படைத்தவர்களும், பிரச்சனைகளுக்கு சரியான ஆலோசனை வழங்கக்கூடியவருமான மீன ராசிக்காரர்களே! நல்ல உடல் ஆரோக்கியம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். தர்ம ஸ்தாபனங்களுக்கு உதவும் எண்ணங்களும் உருவாக்கும் சூழ்நிலையும் உருவாகும். குடும்ப செலவுகள் அதிகரிக்கும்.வாழ்க்கைத் துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. தைரியம் குறையும். சொத்துக்களின் மீதான கலன்கள் உருவாகும். சொத்துகள் வாங்கும்போது வில்லங்கம்  இல்லாமல் இருக்கிறதா என்பதை சரி பார்த்து வாங்குவது நன்மை தரும். தொழில் எதிர்பார்த்த முன்னேற்றம் வளர்ச்சி ஏற்பட்டாலும் செலுத்தக்கூடிய செலவுகளை குறைக்க வேண்டும். தொழில் மாற்றம் இடமாற்றங்கள் உண்டாகும். குழந்தை தொடர்பான விருப்பங்கள் நிறைவேறும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையினர் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி காணலாம். தர்ம சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கை துணை மூலம் ஊர் செலவுகள் அதிகமாகும் .கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் பிரிவினைகளை தடுக்க முடியும். சகோதர வழி செலவுகள் அதிகமாகும். வீடு கட்டும் முயற்சிகள் வெற்றி பெற்று மன மகிழ்ச்சி உண்டாகும். 
 

பரிகாரம் 
 மீனாட்சி அம்மன் வழிபாடும் அன்னதானமும் மஞ்சள் நிற ஆடைகள் தானம் கொடுப்பதும் முன்னேற்றத்தை கொடுக்கும்.


 வளம் தரும் வாஸ்து குறிப்புகள் 


(1) வீடு கட்டுவதற்கான பூமிபூஜை சுப முகூர்த்த நாட்களில் வாஸ்து நாட்களிலும் செய்யலாம்
(2) ஆனி, ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் வீடு கட்டுவதற்கான பூமிபூஜை தொடங்கக்கூடாது.
(3) பூமி பூஜையின் போது வடகிழக்கு மூலையில் வைத்து வழிபாடு செய்து நவதானியங்களை விதைத்து தண்ணீர் ஊற்றி அதில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். அந்த பூக்கள் தண்ணீரில் வலமாக சுற்றி கிழக்கு வடக்கு திசைகளில் நின்றால் தடைகள் ஏதுமின்றி வீடு கட்டி முடிக்கப்படும். இந்த பூவானது இடது பக்கமாக சுற்றி மேற்கு திசைகளில் நின்றால் கட்டிடவேலை தாமதமாகும் என்று அறியவும்.
 (4) தெற்கும் ,மேற்கும் பாதை உள்ள தென்மேற்கு மனைகள் பெண் வாரிசுகள் உள்ளவர்கள் மற்றும் கணவன் மனைவி இவர்களில் ஒருவர் மட்டும் உள்ளவர்கள் இருதய அறுவை சிகிச்சை பெற்றவர்கள் ஆகியோருக்கு நல்ல பலனை கொடுக்கும். மற்றவர்களுக்கு இந்த மனை நல்ல பலனைக் கொடுக்காது.
(5) ஐங்கோணம், அறுங்கோணம் வட்டம் போன்ற மனைகள் சிறப்பான பலனைத் தராது இதுபோன்ற மனைகள் மருத்துவமனை இடங்களாக மாறும் 
(6)வீட்டின் வடக்குப் பகுதியை விட தெற்கில் அதிகமான காலியிடங்கள் இருந்தால் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும் சேமிப்பு இருக்காது.
(7)வீட்டின் கிழக்குப் பகுதியை விட மேற்கு பகுதியில் அதிக காலி இடம் இருந்தால் தொழில் முடக்கம் ஏற்படும் அந்த வீட்டின் குடும்பத் தலைவர் மற்றும் ஆண்களின் வளர்ச்சி தடைபடும்.
(8) வீட்டின் நீளம் மற்றும் அகலம் மனையடி சாஸ்திரத்தில் அளவுகள் சரியாக இருக்க வேண்டும் காலி மனைகளுக்கு  பார்க்க வேண்டியது இல்லை.
(9)வீட்டின் பிரம்ம ஸ்தானம் எனப்படும் மையப் பகுதியில் சுவர் மற்றும் தூண்கள் இல்லாமல் இருப்பது மிகு‌ந்த நன்மையை தரும்.
 (10)அவரவரின் ஜனன கால ஜாதகத்தில் லக்னத்திற்கு நான்காம் ஸ்தானத்தில் இருக்கும் அல்லது பார்க்கும் கிரகங்களின் அடிப்படையில் வாசல் அமையும்.
(11) லக்கனத்திற்கு 4ஆம் அதிபதி பாதகாதிபதியாக இருந்தாலும் அல்லது பாதகாதிபதி அந்த ஸ்தானத்தில் அமர்ந்தாலும் அவர்களுக்கு சொந்த வீடு அமையாது. அதுபோன்று உள்ளவர்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நான்காம் பாகம் வளம் பெற்று இருப்பவர்கள் பெயரில் மனை வாங்கி வீடு கட்டி சொந்த வீட்டில் இருக்கலாம். (12)வீட்டிற்கு பஞ்சபூத சக்திகள் அதாவது நெருப்பு, நிலம், நீர், காற்று, ஆகாயம் ஆகியவற்றின் காந்த அலைகள் அவற்றிற்கு உரிய இடத்தில் கிடைக்கும்படி அறைகளை அமைக்க வேண்டும். அப்போதுதான் வளமான வாழ்க்கை அமையும்.