திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை ! நான்கு முன்னாள் அமைச்சர்கள் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை ! நான்கு முன்னாள் அமைச்சர்கள் குற்றச்சாட்டு!


காஞ்சிபுரம்,செப்16; திமுக ஆட்சிக்கு வந்து இதுவரை மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நால்வர் குற்றச்சாட்டு:

அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்:

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் அதிமுக கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம். மாவட்ட கழக செயலாளர் வி .சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், கோகுல இந்திரா, ஆர்.காமராஜ் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு  ஆலோசனைகளை வழங்கினார்.

முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்:

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்  பேசுகையில்:  வார்டு உறுப்பினர்கள் அனைவரும் நல்ல ஒருங்கிணைப் போடு செயல்பட்ட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளுக்கு துணை போகக்கூடாது என்றும் வேண்டுகோள் வைத்தார். மேலும் மக்கள் திமுகவை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியத்திலும் நாம் வெற்றிபெற முடியும் என்று நம்பிக்கை ஊட்டினார். 

கோகுல இந்திரா:

முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா பேசும்போது : சட்டமன்ற தேர்தல் நேரத்தில் மக்கள் எதிர்க்கும் அளவுக்கு அதிமுக கொஞ்சம் கூட நடந்து கொள்ளவில்லை , திமுகவின் பல்வேறு பொய்யான வாக்குறுதிகள் தான் நமக்கு சிறிய தோல்வியை அளித்தது. கட்சியின் மீது அதிக விசுவாசம் கொண்டவர்களையும் ,மக்களிடம் அதிக செல்வாக்கு கொண்டவர்களையும் தேர்தலில் நிற்க வைத்தால் மக்களிடம் நல்ல பெயர் வாங்க  முடியும் என்றார். மேலும் நாம் அனைத்து வார்டுகளிலும் பூத்துகளையும்,  மகளிர் குழுக்களையும் அதிக அளவில் உண்டாக்கினால் வெற்றி நம்மை தேடி வரும் என்றார்.

ஆர்.காமராஜ்:

முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசுகையில்:  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நல்ல பொறுப்பாளர்களை நியமித்த முன்னாள் முதல்வர் அவர்களுக்கு மிகுந்த நன்றி என்றும் திமுக வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெத்துவேட்டு தான் செய்தது.10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திமுக அரசு எந்தவிதமான கெட்ட பெயரையும் மக்களிடம் சம்பாதிக்கவில்லை என்றும் ஐந்தே மாதங்களில் திமுக அரசு அனைத்து மக்களிடமும் கெட்ட பெயரை சம்பாதித்து உள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் 505 தேர்தல் வாக்குறுதிகளை அளித்த ஸ்டாலின் இது நாள்வரையில் ஒன்றைக் கூட செய்யாமல் சாதனை செய்துவிட்டார் என திமுகவை தாக்கினார். அதிமுக கட்சிக்கு தேய்மானம் இல்லை வளர்பிறை மட்டும்தான் உள்ளது எனவே கட்சியினர் வீடுவீடாக சென்று கடுமையாக உழைக்க  வேண்டும் என்றார்.

திண்டுக்கல் சீனிவாசன்:

முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்  பேசும்போது: முன்னாள் முதல்வர் எடப்பாடியார்  கொரோனாவை கட்டுப்பாட்டில் வைத்திருந்த காரணத்தினால்தான் இந்த 75 சட்டமன்ற வேட்பாளர்கள் கிடைத்தார்கள்.  மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் 45 சட்டமன்ற உறுப்பினர்களை இழந்துவிட்டோம். அம்மா எவ்வாறு நல்ல முறையில் ஆட்சி செய்தார்களோ அதே போல் தான் எடப்பாடியார் அம்மாவின் வழியில் நன்றாக ஆட்சி செய்தார். சட்டப்பேரவையில் எடப்பாடியார் கேட்கும் கேள்விகளுக்கு ஸ்டாலின் எந்த பதிலும் கூற முடியவில்லை, மற்ற அமைச்சர்களும் பதில் கூற முடியாமல் தவிக்கின்றார்கள், சபாநாயகர் அப்பாவுதான் அமைச்சர் போன்று செயல்பட்டு எதற்கெடுத்தாலும் பதில் சொல்கின்றார், இது நல்ல முறை அல்ல என்றார். அதிமுக ஆட்சியில் செய்த எந்த நல்ல திட்டங்களையும் திமுக பின்பற்றாத காரணத்தினால் மக்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டே வருகின்றது. இது வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும் எனக் கூறினார்.

அதிமுக கட்சியினர் ஊழல் செய்தால் முறைப்படி விசாரிக்கலாம் அதற்கு தடையில்லை என எடப்பாடியார் பகிரங்கமாக அறிக்கை விட்டார். அதிமுக ஆட்சியில் அனைத்து டெண்டர்களும் ஆன்லைனில் தான் நடைபெற்றது எந்தவித தவறும் நடக்கவில்லை ஆனால் இப்போது திமுக கட்சியினர் எங்கே சென்றாலும் முதலில் கலெக்க்ஷன் வாங்குவதற்குதான் செல்கின்றார்கள் இவ்வாறு அவர் பேசினார்

அமைப்பு செயலாளர்கள்:

இந்த ஆலோசனை கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  மதனந்தபுரம் கே.பழனி உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.