விடியல் ஆட்சியில் மர்ம ஏலமும் வசூல் வேட்டையும் ?

விடியல் ஆட்சியில் மர்ம ஏலமும் வசூல் வேட்டையும் ?

திருப்பூர்,செப்16; திருப்பூர் மாவட்டத்தில் மதுபான கூடங்களுக்கு ரூ1.5 கோடி அமைச்சர் பெயரை சொல்லி டென்டர் இல்லாமல் மர்ம ஏலம் நடத்தும் மாவட்ட செயலாளரும் மாணவரணி செயலாளரும் பகிரங்க வசூல் வேட்டை கண்டு கொள்வார்களா அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்?

திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக சவுந்தரபாண்டியன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் . அவருக்கு பதிலாக மதுரை மாவட்ட ஆய்வுக்குழு அலுவலராக இருந்த தாஜூதீன் திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் இந்த சூழலில் அமைச்சர் பெயரைச் சொல்லி  பார் உரிமையாளர்களிடம் திமுக மாவட்ட செயலாளர் பத்மநாதன் மற்றும் மாவட்ட மாணவரணி செயலாளர் ஆனந்தன் என்பவரும் பார் உரிமையாளர்களிடம் பினாமியாக ஆட்களை வைத்து பேரம் பேசி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட பகுதியில் டாஸ்மாக் கடைகள் உள்ளது.  இதில் பார் நடத்தும் உரிமையாளர்களிடம் தினமும் ரூ20 ,30 ஆயிரம் என சொல்லி முதல் தவணையாக ரூ1 லட்சத்து 75 ஆயிரத்தை பகிரங்கமாக அமைச்சருக்கு தரவேண்டுமென வசூல் செய்து வருகின்றனர் என பார் உரிமையாளர்கள் புழம்பி வருகின்றனர். திருப்பூர் மாவட்ட திமுக மாணவரணி செயலாளர் ஆனந்தன் என்பவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்,காங்கயம்,அவிநாசி ஊத்துக்குளி,பல்லடம்,உடுமலை பேட்டை போன்ற புறநகர் பகுதியில் செயல்படும் மதுபான கூடங்களுக்கு மொத்தமாக திமுக வடக்கு மாவட்ட செயலாளலர் பத்மநாதனிடம் ரூ1.5 கோடி  கொடுத்து மாவட்ட மாணவரணி செயலாளர் ஆனந்தன் என்பவர்  ஏலம் எடுத்து ஆனந்தன் என்பவருக்கு சாதகமாக ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு ஆட்களை நியமித்து  அந்தந்த பகுதிகளில்  செயல்படும் மதுபானம் கூடங்களில் வசூல் செய்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக ஊத்துக்குளி பகுதியில் சுமார் 13 மதுபானக் கூடங்கள் உள்ளது. இதற்கு மொத்தமாக ரூ12 லட்சம் தொகையை மதுபான கூடம் நடத்தும் சோமசுந்தரம் என்பவர் ஆனந்தன் என்பவரிடம் இந்த தொகையை கொடுத்து மொத்தமாக ஏலம் எடுத்துள்ளார். அதேபோன்று அவிநாசி பகுதியில் சுமார் 22 மதுபானக் கூடங்கள் உள்ளது அதற்கும் தங்கராஜ் என்பவர் ஆனந்தனிடம் ரூ40 லட்சம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளார் தற்போது மதுபான கூடம் நடத்தும் உரிமையாளர்களிடம் முதல் தவணையாக ரூ1 லட்சத்து 75 ஆயிரம் தினமும் 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டுமென ஊத்துக்குளி பகுதி சோமசுந்தரம் ,அவிநாசி பகுதி நாகராஜ், என்பவர்கள் பார் உரிமையாளர்களிடம் மிரட்டி பேரம் பேசி வருகிறார்கள் இதற்கு ஊத்துக்குளி பகுதி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி. இதற்கு உடந்தையாக செயல்பட்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று காங்கேயம்,தாராபுரம், பல்லடம் போன்ற பகுதிகளில் இதுபோன்று ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு ஆட்களை நியமித்து பகிரங்கமாக பத்மநாதன் மற்றும் ஆனந்தன் இருவரும் சேர்ந்து அமைச்சருக்கு கொடுக்க வேண்டும் என டெண்டர் எதுவும் இல்லை அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் எனவும் பகிரங்கமாக மதுபான கூடம் நடத்தும் உரிமையாளர்களிடம் பத்மநாதன் மற்றும் ஆனந்தன் இருவரும் சேர்ந்து வசூல் செய்து வருகின்றனர். இதனால் அரசுக்கு  பலகோடி ரூபாய் வருவாய் இழப்பு வருகிறது. இதை கருத்தில் கொண்டு அந்த துறை சார்ந்த அமைச்சரும் தமிழக முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.