மோசடி நிதி நிறுவனம் நடத்தி திமுக பிரமுகரின் சொத்துகளை அபகரித்த திமுக தலைவரின் குடும்பம்! 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார்!!

மோசடி நிதி நிறுவனம் நடத்தி திமுக பிரமுகரின் சொத்துகளை அபகரித்த திமுக தலைவரின் குடும்பம்! 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார்!!

எஸ்.கே.பி. நிதி நிறுவனம்

காஞ்சிபுரம், ஆக 14, காஞ்சிபுரம் மாவட்டம் ராயன் குட்டை பள்ளத்தெருவை சேர்ந்தவர் சேகர்      ( வயது 49) திமுக பிரமுகர்.இவர் அதே பகுதியில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே பைனான்ஸ் மற்றும் சீட்டு கம்பெனி நடத்திவரும் திமுகவை சேர்ந்த நாக லுத்து தெருவை சேர்ந்த எஸ்.கே.பி.சீனிவாசன் மற்றும் அவரது மகன் சரவண பெருமாள்,அண்ணன் மகன்கள் சந்தோஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் தனது ரூ 2 கோடி மதிப்புள்ள சொத்து மற்றும் ரூ38.35 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை பறித்து விட்டதாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

சொத்துக்களை பறிகொடுத்த திமுக பிரமுகர் சேகர்

   இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் எஸ்.கே. பி.சீனிவாசன் உள்பட 4 பேர்கள் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நிதி நிறுவன அதிபர் சீனிவாசன் திமுகவின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் என்பதும் முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரம் வந்தபோது அவருக்கு வெள்ளி செங்கோல் பரிசளித்த வர் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் எஸ்.கே.பி. சிட்டு கம்பெனி யின் பங்குதாரராக உள்ள சீனிவாசனின் அண்ணன் மகன் கார்த்திக் நகர திமுக  இளைஞரணி துணை செயலாளராக உள்ளார்.மற்ற பங்குதாரர்கள் திமுகவில் உள்ளனர்.

திமுக கட்சியின் நகர இளைஞரணி துணை செயலாளர் கார்த்திக்


        திமுக வில் உள்ளதால் காஞ்சிபுரத்தில் மிகப் பெரிய அளவில் வட்டிக்கு பணம் கொடுத்தல்,மீட்டர் வட்டி,கந்து வட்டி மற்றும் ஏராளமான சீட்டுகள்பொன்றவற்றை நடத்தி வருகிறார்.இவர் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களிடம் அடாவடித் தனமாக கந்து வட்டி,மீட்டர் வட்டி வாங்கி ரவுடிகளை வைத்து மிரட்டி அவர்களின் சொத்துகளை தன் பெயருக்கும்,தன் மகன்களின் பெயருக்கும் மாற்றி பலவிதமான மோசடி வேலைகளை செய்து வருகிறார்கள் என கூறப்படுகிறது.இந்த நிதி நிறுவனத்தில் சிக்கி பணத்தையும், சொத்தையும் பறி கொடுத்தவர்கள்  ஏராளம் பேர் என கூறப்படுகிறது.சுமார் 15 ஆண்டு காலமாக பதிவு செய்யாமல் நிதி நிறுவனம் நடத்தி பதிவு செய்யப்பட்ட பைனான்ஸ் நிறுவனம் போல இவர்கள் பல கோல்மால் வியாபாரம் செய்து திட்டமிட்டு அரசை ஏமாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.பல்வேறு மோசடிகளை அரங்கேற்றி வரும் எஸ்.கே.பி. பைனான்ஸ் குழுமத் தினர் மீது ஒரு சிலர் மட்டுமே புகார் கொடுத்துள்ளனர்.பலரும் இவர்களின் அச்சுறுத்தலுக்கு பயந்து உயிரை கையில்  பிடித்துக் கொண்டு வேறு மாவட்டத்திற்கு சென்று விடுகிறார்கள்.அதனால் இதுவரை மோசடி புகாரில் காவல் துறையில் எஸ்.கே. பி. பைனான்ஸ் நிறுவனம் சிக்கவில்லை.தற்போது முதன்முறையாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் எஸ்.கே. பி.சீனிவாசன் தன் மகன்களுடன் சிக்கியுள்ளார்.திமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் மீது அதே கட்சியை சேர்ந்த நிர்வாகி  ஒருவரே  புகார் கொடுத்து தற்போது ஜாமீனில் வெளிவர முடியாத 4 பிரிவுகள் மூலம் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சொத்துக்களை அபகரித்த திமுக பொதுக்குழு உறுப்பினர் 
எஸ்.கே.பி.சீனிவாசன்

     இதைவிட கொடுமை என்னவென்றால் பல நூறு கோடி அளவுக்கு பைனான்ஸ் மற்றும் சீட்டு நடத்தும் இந்த கம்பெனி இன்னமும் பதிவு செய்யப்படாத கம்பெனி என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் டிராவல்ஸ் நிறுவன அதிபர் சேகர் பெற்றுள்ளார்.

 திமுக  வின் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எஸ்.கே. பி.சீனிவாசன் செய்த மோசடிகள் குறித்து பாதிக்கப்பட்ட திமுக பிரமுகர் சேகர் நம்மிடம் கூறுகையில் : சீனிவாசனின் மோசடி நிதி நிறுவனத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு சீட்டும், ரூ50 லட்சம், ரூ25 லட்சம், ரூ10 லட்சம் ரூ3 லட்சம் ஆகிய பிரிவுகளில் தலா ஒரு சீட்டும் கட்டி வந்தேன். அதற்காக செக்யூரிட்டி யாக களியனூரில் உள்ள 5 சொத்துக்கள்,பாக பிரிவினை பத்திரம் என 2 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கார்த்திக் என்பவருக்கு பவர் பத்திரம் எழுதி கொடுத்தேன்.அதன் பின் ரூ1 கோடி மதிப்புடைய சீட்டை எடுத்தேன் இந்நிலையில் நான் கட்டி வந்த மற்ற சீட்டுகளை திடீரென ரத்து செய்து விட்டனர்.

திமுக உறுப்பினர் மற்றும் வழக்கறிஞர் சந்தோஷ்குமார். எஸ்கேபி சீனிவாசனின் அண்ணன்

          ரத்து செய்யப்பட்ட சீட்டுகளில் கட்டிய தொகையான ரூ 38.50 லட்சம் தரவில்லை.தவிர நான் எழுதி கொடுத்த 2 கோடி சொத்துகளை கார்த்திக் என்பவர்  சரவண பெருமாள் என்பவர்  பெயருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார்.என்னுடைய ரூ 38.50 லட்சம் மற்றும் 2 கோடி மதிப்புள்ள சொத்துக்களை எஸ்.கே.பி.சீனிவாசன் அபகரித்துக் கொண்டார்.திருப்பி கேட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டுகிறார் என்றார்.திமுக பிரமுகர் சேகர் அளித்த புகாரை விசாரணை செய்த பொருளாதார போலீசார்  புகாரில் முகாந்திரம் இருப்பது உண்மை என்பதால் எஸ்.கே. பி.சீனிவாசன் மற்றும் அவரது மகன்கள் மீது மோசடி,கொலை மிரட்டல்,ஆபாசமாக பேசுதல் போன்ற 4 பிரிவுகளில் 8 வழக்குகளை பதிவு செய்துள்ளனர் விடியல் திமுக வின் முக்கிய பிரமுகர் ஒருவரே மோசடி நிதி நிறுவனம் நடத்தி திமுக பிரமுகரை யே ஏமாற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.