அரசு அதிகாரிகள் - பெண்களை மிரட்டி வழக்கில் கைதான போலி நிருபர் சட்ட ராஜசேகர் இன்று மற்றொரு வழக்கில் கைது! குண்டர் சட்டம் பாயுமா?

அரசு அதிகாரிகள் - பெண்களை மிரட்டி வழக்கில் கைதான போலி நிருபர் சட்ட ராஜசேகர் இன்று மற்றொரு வழக்கில் கைது! குண்டர் சட்டம் பாயுமா?

போலி நிருபர்கள்  சட்ட ராஜசேகர்

தேனி,செப் 13;

மற்றொரு வழக்கில் போலி நிருபர் சட்ட ராஜசேகர் இன்று கைது செய்யப்பட்டான்.

தேனி மாவட்டத்தில் பல்வேறு அரசு அதிகாரிகளையும்,  தொழிலதிபர்களையும், குவாரி உரிமையாளர்களையும் மிரட்டி பணம் பறித்தல் கட்டப்பஞ்சாயத்து செய்து பொதுமக்களை மிரட்டி கொலை மிரட்டல் விடுப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த போலி நிருபர்கள்  சட்ட ராஜசேகர்,பாஸ்கரன்,அய்யர்சாமி ஆகியோர் மீது போடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெண் குறித்து அவதூறு - சட்ட ராஜசேகர் கைது - சிறையில் அடைப்பு:

தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த அருணா தேவி  என்பவர் போடி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் இடம் அளித்த புகார் மனுவில் தன்னையும் வெறு ஒருவரையும் இணைத்து கள்ளத் தொடர்பு இருப்பதாகவும் இரு சமூகங்களுக்கிடையே ஜாதி மோதல்களை தூண்டும் வகையிலும் வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பி கொலை மிரட்டல் விடுத்த போடி குப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜசேகர், போடி பொட்டல் குளம் பகுதியைச் சார்ந்த அய்யனார்சாமி, பாஸ்கரன் ஆகியோர் மீது போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் இவர்கள் மூவரின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அய்யனார் சாமி என்பவன் மட்டும் முதலில் கைது செய்யப் பட்டான். பின்னர் இதில் முக்கிய மூளையாக செயல்பட்ட போலி நிருபர் மற்றும் போலி வழக்கறிஞராக வளம் வந்த சட்ட ராஜசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். பாஸ்கரன் என்பவன் மட்டும் தலைமறைவாகி உள்ளான்.

போலி நிருபர் சட்ட ராஜசேகர் மீண்டும் கைது:

இதற்கிடையில்  ஜெயா டிவி நிருபர் அருண் குமார் போடி காவல் நிலையத்தில் கொடுத்திருந்த மற்றொரு புகார் தொடர்பான வழக்கில் போலி நிருபர் சட்ட ராஜசேகர் போடி காவல் துறையினரால் மீண்டும் கைது செய்யப்பட்டான். இதே போல மேலும் பலர் இந்த போலி நிருபர் சட்ட ராஜசேகர் மீது பல்வேறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

குண்டர் சட்டத்தில் கைது?

ஒவ்வொரு வழக்கிலும்  கைது செய்யப்படுவார் என தெரிகிறது. சட்ட ராஜசேகர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.