விடியல் திமுக அரசின் பழிவாக்கும் படலம் ஆரம்பம்! நேற்று எம்.ஆர்.விஜய பாஸ்கர் இன்று எஸ். பி.வேலுமணி நாளை ........?

விடியல் திமுக அரசின் பழிவாக்கும் படலம் ஆரம்பம்! நேற்று எம்.ஆர்.விஜய பாஸ்கர் இன்று எஸ். பி.வேலுமணி நாளை ........?

சென்னை ஆக 10 , விடியல் திமுக அரசின் பழிவாங்கும் படலம் தொடர்கதையாகி வருகிறது.நேற்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் இன்று முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி என நீளும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை படலம் நாளை யாரை நோக்கி நகர உள்ளது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது

அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் கோவை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளராகவும்,அதிமுக அமைப்பு செயலாளராகவும் உள்ளார் . உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது அவர் ,பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையில் கோவை கணபதி ஜி. வி.ராவ் நகரை சேர்ந்த திருவேங்கடம் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.அதில் அரசின் ஒப்பந்த பணிகளை பெற்றுத் தருவதாக, 1.20 கோடி ரூபாய் முன்னாள் அமைச்சர் வேலுமணி  மோசடி செய்து விட்டதாக, குறிப்பிட்டு உள்ளார். குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய 52 இடங்களில் இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் என சோதனை நடத்தி வருகின்றனர். கோவை, குனியமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் வசிக்கும் முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடு, மதுக்கரை மார்க்கெட் பகுதியில் வசிக்கும்முன்னாள் அமைச்சர் வேலுமணி மனைவியின் சகோதரர் சண்முகராஜா வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் 10 பேர் கொண்ட போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை கோடம்பாக்கத்தில்முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருங்கிய நபர் வீடுகளில் சோதனை நடக்கிறது. கோவையில் 35, சென்னையில் 15 இடங்களிலும், காஞ்சிபுரம், திண்டுக்கல்லில் வேலுமணிக்கு தொடர்புடைய தலா ஒரு இடத்திலும் சோதனை நடக்கிறது.

விசாரணை !

இதற்கிடையில்  சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள எம்.எல்
ஏ.குடியிருப்பில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி தங்கியுள்ள அறையில் இன்று காலை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தி வேலுமணியிடம்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்குப்பதிவு !

இந்த சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ,அவரது சகோதரர் அன்பரசன், சந்திரசேகர், முருகேசன், ஜேசு ராபர்ட் ராஜா, கு.ராஜன் உள்ளிட்ட 7 பேர் மற்றும் 10 நிறுவனங்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ்பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் அளித்த பொய் புகார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இது விடியல் திமுக அரசின் பழிவாங்கும் செயலை காட்டுகிறது 

   அ.தி.மு.க.வினர் போராட்டம்

இதற்கிடையில் கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

கோவை  மாவட்ட அதிமுக செயலாளர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி அருண்குமார் உள்பட 8 எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர். குறிப்பாக பெண்கள் அதிகளவில் அங்கு திரண்டிருந்தனர். அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அங்கிருந்த போலீசாரிடம் உள்ளே செல்ல அனுமதி கேட்டனர். ஆனால் அவர்கள் அனுமதிக்க மறுத்தனர். ஆனால் அதனையும் மீறி எம்.எல்.ஏ.க்களும், கட்சி தொண்டர்களும் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து அவர்கள் எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது ‘அஞ்சமாட்டோம், அஞ்சமாட்டோம், அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம், எஸ்.பி.வேலுமணி வாழ்க’ என கோ‌ஷங்களை எழுப்பியபடியே இருந்தனர்.
பழி வாங்கும் பலடம் ஆரம்பம் ! 
விடியல் திமுக அரசு பதவி ஏற்ற முதல் முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க நேரம் பார்த்து வந்தனர்.பழிவாங்கும் படலம் ஆரம்பம் ஆனதை தொடர்ந்து நேற்று முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இன்று லஞ்ச ஒழிப்புத் துறை எஸ். பி. கங்கா தர் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் முன்னாள் அமைச்சர் எஸ். பி.வேலுமணி மீது பழி வாங்கும் நடவடிக்கையாக வழக்கு பதிவு செய்துள்ளனர். 
நேற்று எம்.ஆர்.விஜய பாஸ்கர் இன்று முன்னாள் அமைச்சர் எஸ் பி.வேலுமணி நாளை ....?
நாளை ....?
அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்து அடக்கிவிட விடியல் திமுக அரசு முயற்சி செய்கிறது.