அதிமுக கிளை செயலாளர் தேர்வு !

அதிமுக கிளை செயலாளர் தேர்வு !

கடலூர்,அக்1; கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் ஊராட்சியில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் ஆலோசனையின் பேரில், திட்டக்குடி நகர செயலாளர் அரங்கநீதிமன்னன் தலைமையில், ஆடிட்டர் பழமலை முன்னிலையில்  கிளை கழக செயலாளர்கள் தேர்வு கூட்டம் நடைபெற்றது. அதில் கழுதூர் ஊராட்சி அதிமுக கிளை செயலாளராக பாரதிராஜா, செந்தில்ராஜா, அரியநாச்சி கிளை செயலாளராக லெட்சுமணன் ஆகியோர் கட்சியினரால் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் மங்களூர் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் புடையூர் பெருமாள், கடலூர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் புதுக்குளம் ராமலிங்கம், மாவட்ட கழக பிரதிநிதி சிறுமுளை முத்துராமன், தகவல் தொழில்நுட்ப பிரிவு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் பி.டி முத்தமிழ்செல்வன், ஒன்றிய கவுண்சிலர் மேல் ஐவனூர் ராமலிங்கம், மங்களூர் ஒன்றிய இளைஞரணி அரியநாச்சி எ.கே.டி மணிகண்டன் மற்றும் கட்சியினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.