ஸ்ரீபெரும்புதூர் அருகே காட்ரம்பாக்கத்தில் பல நூறு டன் கணக்கில்  மலைபோல் கொட்டப்பட்டு இருக்கும் கண்ணாடி கழிவுகளால் காற்று மாசு ஏற்படுவதோடு நிலத்தடி நீரும் மாசு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது !

ஸ்ரீபெரும்புதூர் அருகே காட்ரம்பாக்கத்தில் பல நூறு டன் கணக்கில்  மலைபோல் கொட்டப்பட்டு இருக்கும் கண்ணாடி கழிவுகளால் காற்று மாசு ஏற்படுவதோடு நிலத்தடி நீரும் மாசு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது !

தொழில் நகரமான ஸ்ரீபெரும்புதூரில்  சாதாரண குண்டு ஊசி முதல் விலை உயர்ந்த சொகுசு கார் வரை இங்கு தயாரிக்கப்பட்டு வருகின்றன.ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இதனால் ஸ்ரீபெரும்புதூர் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க இங்கு செயல்படும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்பது பல ஆண்டுகளாக இருந்து வரும் குற்றச்சாட்டு. அந்தவகையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே காட்டரம்பாக்கம் ஊராட்சியில் திறந்த வெளியில் பல நூறுடன் கண்ணாடி கழிவுகள் மலை போல் கொட்டப்பட்டு இருப்பது மாசு ஏற்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.  

காட்ரம்பாக்கம் பகுதியில் சுமார் 10 ஏக்கர் நில பரப்பில் மலை போல் கண்ணாடி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. இதனை மறுசுழற்சி என்ற பெயரில் திறந்த வெளியில் அரைத்து வருகின்றனர். இதனால்  கண்ணாடி துகல்கள் பறந்து காற்று மாசு, மழை காலங்களில் மழை நீருடன் கண்ணாடி துகள் நிலத்தடிக்கு செல்வதோடு  மழை நீர் வடிகால்வாய்கள் வழியாக அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று மாசு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக கண்ணாடி துகல்கள் காற்றில் பறப்பதால் வாக ஓட்டிகளின் கண், மூக்கில் பட்டு அவதியை ஏற்படுத்துவதாகவும். அதேபோல் கண்ணாடி துகல்கள் கலந்த நீரை குடிக்கும் கால்நடைகளுக்கு உடல் நல கேடு ஏற்படுவதாக தெரிவித்தனர்.மேலும் மழைக்காலங்களில் மழை நீருடன் கண்ணாடி துகள்கள் வடிகால்வாய்கள் மூலம் சென்னை மக்களின் குடிநீர் ஆதரமான செம்பரம்பாக்கம் ஏரியில்  கலப்பதால் சென்னை மக்களுக்கே பேரும் கேடு என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே உடனடியாக கண்ணாடி கழிவுகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.