விடியல் ஆட்சியின் சாதனை தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 2 யூனிட் மூடல்! 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு : தொடர் மின்வெட்டு !

விடியல் ஆட்சியின் சாதனை தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 2 யூனிட் மூடல்! 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு : தொடர் மின்வெட்டு !


தூத்துக்குடி,அக்1; விடியல் ஆட்சியில் தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 2 யூனிட்கள் மூடப்பட்டதால், 420 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு, நகரில் தொடர் மின் வெட்டு ஏற்பட்டு மக்கள் அவதிபட்டனர். தூத்துக்குடி அனல்மின் நிலையம் இந்தியாவில் உள்ள அனல்மின்நிலையங்கள் பழைமையானது ஒன்று.      1979ம் ஆண்டு மின்உற்பத்தி தொடங்கியது. தூத்துக்குடி அனல்மின் நிலையம் அ.தி.மு.க.ஆட்சியில் தொடங்கப்பட்டது.இன்றைக்கு 5 யூனிட்கள் உள்ளன. ஒவ்வொரு யூனிட்டிலும் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, 5 யூனிட்களில் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செயப்படுகிறது. அ.தி.மு.க ஆட்சி இருக்கும்வரை தமிழக மக்களுக்கு மின்வெட்டு வந்ததில்லை. தமிழகம்மின் உற்பத்தியில் மின்மிகை மாநிலமாக விளங்கியது.

தி.மு.க.ஆட்சிக்கு வந்தாலே, எப்போது மின்சாரம் போகும் நிலைமையில் மக்கள் உள்ளனர். தூத்துக்குடி தொகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் கூடுதல், குறைவான மின் அழுத்தம் ஏற்பட்டு டி.வி பெட்டி, பிரிட்ஜ், வாசிங் மிசின் பழுதடைந்துவிடுகிறது. குழந்தைகளுக்கு உணவை கூட சமைத்து கொடுக்க முடியாத நிலையில் குடும்ப தலைவிகள் உள்ளனர்.  தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 2 வது யூனிட், 3வது யூனிட் ஆகியவற்றில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 420 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தூத்துக்குடி அனல்மின்நிலையத்திற்கு தேவையான நிலக்கரி இறக்குமதி செய்ய நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை. ஒவ்வொரு தடவையும், ஒடிசா, விசா பட்டணத்தில் இருந்து நிலக்கரி இறக்குமதியை விடியல் அரசு செய்கிறது. விடியல் அரசு நிலக்கரியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய காலதாமதம் செய்கிறது.  அதற்கு முந்தைய அரசு நிலக்கரி இருப்பில் மோசடி கூறி தப்பிக்க முயற்சி செய்ய பார்க்கிறது.

2 யூனிட்களில் மின்சாரம் தயாரிக்க நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின்நிலைய தலைமை பொறியாளர் கிருஷ்ணகுமார் விரைவில் நிலக்கரி இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து யூனிட்களும் செயல்படும் என்றார். தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 3 யூனிட்களில் 630 மெகாவாட் மின்உற்பத்தியில் சுமார் 540 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்யப்படுகிறது பற்றாக்குறை நிலை ஏற்படுகிறது. விடியல் ஆட்சி வந்தாலே மக்களுக்கு நிம்மதி இல்லை, மின்வெட்டுதான் மக்கள் பேச தொடங்கிவிட்டனர்.