அதிமுக வேட்பாளர் காயத்திரி லட்சுமிகாந்தனுக்கு ஆதரவாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான பலராமன் தீவிர வாக்கு சேகரிப்பு!

அதிமுக வேட்பாளர் காயத்திரி லட்சுமிகாந்தனுக்கு ஆதரவாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான பலராமன் தீவிர வாக்கு சேகரிப்பு!

திருவள்ளூர்,அக்1; நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதி அளித்து திமுக ஏமாற்றியதாகவும் இதனால் நீட் தேர்வுக்கு பயந்து சில மாணவர்கள் தற்கொலைக்கு காரணமான திமுகவுக்கு  நடைபெற உள்ள இடைத்தேர்தலில்  பாடம் புகட்ட வேண்டும் என திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பொன்னேரி எம்எல்ஏவுமான சிறுனியம் பலராமன் கேட்டுக் கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றிய குழு அதிமுக வேட்பாளர் காயத்திரி லட்சுமிகாந்தனுக்கு ஆதரவாக திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான பலராமன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுக ஒரு ஊழல் கட்சி. தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றுவது திமுகவின் கை வந்த கலை என்றும் திமுக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும் ஆனால் திட்டமிட்டபடி நீட் தேர்வுக்கு நுழைவுத்தேர்வு நடந்து முடிந்துள்ளது.

மாணவர்கள் நீட் தேர்வுக்கு பயந்து சிலர் தற்கொலை செய்துகொண்டதாகவும். இதுபோன்ற பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் திமுகவிற்கு நடைபெற உள்ள மாம்பாக்கம் ஒன்றிய இடைத்தேர்தலில் திமுகவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுனியம் பலராமன் தெரிவித்தார்.  மேலும் திமுகவை தோற்கடிக்க தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும் என்றும். நம்முடைய வேட்பாளர் கே. காயத்ரி லட்சுமிகாந்தன் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக செய்த சதியால் நம்முடைய வேட்பாளர் சொற்ப வாக்குகளால் வெற்றியை இழந்தார்.  மீண்டும் கழக வேட்பாளர் வெற்றி பெற நமக்கு இப்பகுதியில் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது  என்றும். நடைபெறவுள்ள  இடைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று கழக இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடியார், கழக ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கரங்களில் சமர்ப்பிப்போம்  என்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் பொன்னேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி. பலராமன் பேசினார். இந்த பிரச்சாரத்தின் போது கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட அம்மா பேரவை செயலாளருமான கே. எஸ் விஜயகுமார் ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணா ஒன்றிய செயலாளர் பிரசாத் மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ் உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.