புவனகிரி ஒன்றியம் 11-ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு புவனகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தீவிர வாக்கு சேகரிப்பு !

புவனகிரி ஒன்றியம் 11-ஆவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு புவனகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ தீவிர வாக்கு சேகரிப்பு !


கடலூர்,அக்1; கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புவனகிரி ஒன்றியம்-11-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவுகேட்டு புவனகிரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளருமாகிய அருண்மொழி தேவன் வாக்கு சேகரித்தார்.  

புவனகிரி ஒன்றியம் பதினோராவது வார்டுக்கு உட்பட்ட அழிச்சிக்குடி கிராமத்தில் ஒரு வீட்டையும் விடாமல் ஒவ்வொரு வீடாக சென்று அதிமுக வேட்பாளர் மிக நல்ல மனிதர் உங்கள் குறைகளை ஓடோடி வந்து தீர்த்து வைப்பார். அதனால் அவருக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள் என புவனகிரி எம்எல்ஏ அருண்மொழி தேவன் கிராம பொது மக்களை கேட்டுக் கொண்டார்.

ஒவ்வொரு வீட்டினரும் கட்சியினருக்கு நல்ல வரவேற்பு அளித்து அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணனுக்கே வாக்களிப்பதாக உறுதி கூறினர். இந்நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பன், கடலூர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் புருஷோத்தமன், மாநில எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் முருகு மணி கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் வீர மூர்த்தி, புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வக்குமார் புவனகிரி மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப சபரி ராஜன், ஜெயசீலன், கமலக்கண்ணன் மற்றும் ஒன்றிய கிளைக்கழகபொறுப்பாளர்கள், நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.