திண்டுக்கல் நகரில் சைக்கிள் வலம் வந்த எஸ்.பி.

திண்டுக்கல் நகரில் சைக்கிள் வலம் வந்த எஸ்.பி.

திண்டுக்கல்,அக்1; திண்டுக்கல் நகரில் சைக்கிளில் வலம் வந்து எஸ்.பி. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். திண்டுக்கல் எஸ்.பி சீனிவாசன் திண்டுக்கல் நகரில் சைக்கிளில் வந்து பொதுமக்களுக்கு குற்றம் சம்பந்தமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். பொதுமக்கள் அச்சம் இல்லாமல் பயம் இல்லாமல் வாழ்வதற்கு சமுதாயத்தில் தவறுகளை உடனுக்குடன் போலீசாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். சந்தேகப்படும்படியாக யார் இருந்தாலும் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என அறிவுறுத்தினார். அவருடன் டி.எஸ்.பி அருண் கபிலன் உட்பட பலர் சைக்கிளில் வந்தனர். பெண்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும். வெளியூர் செல்வதாக இருந்தால் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது உட்பட பல தகவல்கள் குறித்து எஸ்.பி.விளக்கினர். அவருடன் ஏராளமான போலீசார் நகரில் வலம் வந்தனர்.