பரங்கிமலை ஒன்றிய 4வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு  டி.எஸ்.பாலாஜி வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

பரங்கிமலை ஒன்றிய 4வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு  டி.எஸ்.பாலாஜி ஆகியோர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் !

மூவரசம்பட்டு,அக்1; தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 6 மற்றும் 9 தேதிகளில்  இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை கிழக்கு ஒன்றியம் மூவரசம்பட்டு ஊராட்சி பகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள்   

அதிமுக அரசு செய்த சாதனைகளையும் திமுக கடந்த தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை  அளித்து ஆட்சி அமைத்து இருப்பதை மக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்களை கொடுத்து பரங்கிமலை ஒன்றியம் 4வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் டி‌.எஸ்.பாலாஜிக்கு இரட்டை இலை சின்னத்திலும், மூவரசம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் டி.எஸ்.பக்தவச்சலத்திற்கு கை உருளை சின்னத்திலும்,  வாக்களிக்குமாறு பொதுமக்களிடத்தில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

உடன்  சென்னை புறநகர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.எம்.தனசேகர், சென்னை மாநகராட்சி 187 வது வார்டு வட்ட செயலாளர் என்.தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள்,  ஊராட்சி கழக நிர்வாகிகள்  மற்றும் தொண்டர்கள், பெண்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.