எட்டயபுரம் அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம்- கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை !

எட்டயபுரம் அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம்- கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை !

எட்டயபுரம்,அக்1; வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சூரப்ப நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த காலைசாமி என்பவரின் மகன் முருகேசன் வயது( 53 )  இவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் மகன்கள் உள்ளனர், மனைவி மாரியம்மாள் கூலி வேலை செய்து வருகிறார். இறந்த முருகேசனுக்கும் மனைவி மாரியம்மாளுக்கும் அடிக்கடி சண்டை நடப்பதாக கூறப்படுகிறது. முருகேசனுக்கு ரத்தக் குறைபாடு, உப்பு சத்து அதிகமாக இருந்து வந்ததால், அடிக்கடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்,  இதனால் வேலைக்கு போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் சூரப்ப நாயக்கன்பட்டி காட்டுப்பகுதியில், எரிந்த நிலையில் முருகேசன் சடலம் இருப்பதாக மாசார்பட்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், உடலை கைப்பற்றிய மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முருகேசன் காட்டுப் பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்ததை அடுத்து  மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் இது தற்கொலையா அல்லது கொலையா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.