பழனி அருகே சத்திரப்பட்டியில் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை !

பழனி அருகே சத்திரப்பட்டியில் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை !

பழனி ,அக்1;பழனி அருகே சத்திரப்பட்டியில் உள்ள பத்திரப்பதிவு துறை அலுவலகத்திற்க்கு வரும் பொதுமக்களிடத்தில் ஊழியர்கள் லஞ்சம் வருவதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றுள்ளது. இதனையடுத்து  திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சத்திரப்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்க்கொண்டனர். பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றி வரும் பதிவாளர்  ஜோதிமணி(43) யிடம் லஞ்ச ஒழிப்புத்துறை  டி.எஸ்.பி நாகராஜன்‌ தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் கணக்கில் வராத பணம் எட்டாயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது, இதுகுறித்து பத்திர பதிவுத்துறை அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புதுறை விசாரணை அதிகாரி பாசியம்  விசாரணை நடத்தி வருகின்றனர். சத்திரப்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர் அப்போது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.