இந்த வார ராசி பலன்கள் ( 26.07.2021 முதல் 01.08.2021 வரை)

இந்த வார ராசி பலன்கள் ( 26.07.2021 முதல் 01.08.2021 வரை)

இந்த வார ராசி பலன்கள் ( 26.07.2021 முதல் 01.08.2021 வரை)
இந்த வார ராசி பலன்கள் ( 26.07.2021 முதல் 01.08.2021 வரை)

வார ராசி பலன்கள் (26.7.2021 )முதல்(1.8.2021) வரை

கணித்த வர் :

ஸ்ரீ நந்தா துரைசாமி
ஸ்ரீ நந்தா தமிழ் வாஸ்து ஜோதிட நிலையம் சேலம் - 636 113


 மேஷம்

அஸ்வினி-1,2,3,4,பரணி- 1,2,3,4,கார்த்திகை -1 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் ச,சே,சோ,ல,செ,சை,லி,லு,லே,லோ,சொ,சௌ,அ,ஆ ஆகிய பெயர் எழுத்துக்களை கொண்டவர்களுமான மேஷ ராசி அன்பர்களே!
முன்கோபமும் மற்றவர்களை அடக்கி ஆளும் எண்ணங்களும் அவசர தன்மை கொண்ட மேஷ ராசி நண்பர்களே... உடல் நலத்தில் அக்கறையும் கவனமும் தேவை. மனதில் தேவையற்ற குழப்பங்கள் வந்து வந்து போகும். உடன் பணியாற்றுபவர்களுடன் அனுசரித்து செல்வது தேவையற்ற பிரச்சனையிலிருந்து பாதுகாப்பு ஏற்படும். தேவையற்ற இடமாற்றம் உண்டாகும். உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை உண்டாகும் . தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களில் விரயங்களை தவிர்க்க பராமரிப்பு செலவுகள் செய்யலாம். சுப செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் உறவினர்கள் வழி உதவிகள் கிடைக்கும். மற்றவர்களை நம்பி எந்த காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது வீண் விரயங்களை தவிர்க்க உதவும். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. கலை துறையில் ஆர்வமும் ஈடுபாடும் புகழ் பெறும் சூழ்நிலையும் அமையும். மனோ தைரியம் புதிய கண்டுபிடிப்புகளில் ஆர்வமும் ஏற்படும். அனைத்து பணிகளையும் தானே முன் நின்று செயல் படுவதும்,பிரயாணம் செய்வதில் மகிழ்ச்சியும் உண்டாகும். 
 பரிகாரம் : அரச மற்றும் வேப்ப மரத்துடன் உள்ள பிள்ளையார் கோவிலில் வழிபாடு செய்து பிரசாதம் படைத்து ஒன்பது முறை சுற்றி வந்து வழிபட எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.

ரிஷபம்

கார்த்திகை -2,3,4, ரோகிணி-1,2,3,4, மிருக சீரிடம்-1,2 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் இ,உ,ஏ,ஈ,ஒ,வ,வி,அவாதி,வே,வோ ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்டவர்களுமான ரிஷபராசி அன்பர்களே!சொத்துக்களை சேர்ப்பதில் ஆர்வமும் ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபாடும் கொண்ட ரிஷப ராசி
நேயர்களே. எதையும் சுயமாக செய்து முடிக்கும் தைரியம் உண்டாகும். உடல் நலம் நன்றாக இருக்கும். நினைத்ததை சாதிக்கும் ஆற்றல் உண்டு. உத்தியோகத்தில் பாராட்டும், புகழும் உண்டாகும்.நண்பர்கள் உறவினர்களிடமிருந்து சுப செய்திகள் வந்து சேரும். வருமானங்கள் அதிகரித்தாலும்,அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும்.மற்றவர்களை அடக்கி ஆளும் தைரியம் உண்டாகும்.  பகைவர்கள் கட்டுபாட்டில் இருப்பர். 
வண்டி,வாகன சொத்து சேர்க்கை ஏற்படும். கல்வியில் சீரான முன்னேற்றம் உண்டாகும்.தந்தையின் உடல் நலனில் கவனம் 
வேண்டும்.இடமாற்றத்தையும், வெளியூர் பயணங்களும்
தொழில் முன்னேற்றமும் உண்டாகும். சுப நிகழ்ச்சி தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும்.குடும்ப உறவினர்களுடன், நண்பர்களுடன் விட்டுக்
கொடுத்து செல்வது நன்மை உண்டாகும்.  தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
உடன் பிறந்த சகோதர உறவுகளுக்கு உதவிகள்
செய்வதன் மூலம் ஒற்றுமை மேம்படும். 
 பரிகாரம் : 
குல தெய்வ கோவில் அல்லது இஷ்ட தெய்வ 
கோவில் பராமரிப்பு பணிகளுக்கு நிதி உதவி செய்வதன் மூலம் முன்னேற்றம் வளர்ச்சி
ஏற்படும்.


 மிதுனம்

மிருகசீரிடம்-3,4, திருவாதிரை-1,2,3,4, புனர்ப்பூசம்-1,2,3 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் கா,கி,கு,க,ஞ,ச,கே,கோ,ஹ ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்டவர்களுமான மிதுனராசி அன்பர்களே!ஆயக்கலைகள் அறிந்து கொள்வதில் ஆர்வமும், 
புராணங்கள்,இதிகாசங்கள் கற்று ஆராயும்
வல்லமையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே,
புதிய சிந்தனையும் செயல்பாடுகளும் மிகுந்த நன்மைகளையும், பாராட்டுகளையும் தேடிதரும்.சுபசெய்திகளும், நண்பர்கள், உறவினர்கள் வருகை புரிவதாலும் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.பண வரவுகள் பல வழிகளில் வந்து சேரும். திறமைகள் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை மேம்படும். சகோதர உறவுகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.ஆடம்பர நாட்டம் அதிகமாகும்.
தைரியம், துணிச்சல் உண்டாகும்.தற்பெருமை பேசுவதை தவிர்க்கவும்.அரசு வழி ஆதரவு உண்டு. பொருள் சம்பாதிப்பதற்காக காலம் கருதாது கடினமாக உழைக்கும் ஆற்றலும், துணிவும் உண்டாகும்.ஆன்மீக பயணங்கள் மூலம் ஆத்ம திருப்தி உண்டாகும்.குரு பக்தி, தெய்வ நம்பிக்கை ஞானம் ஏற்படும். தொழில் மூலம் கொடுத்த கடன்கள் வசூலாகும்.கல்வியாளர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும்.
சுறுசுறுப்பான மன நிலையுடன் செயல்படுவதால்
முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும்.
 பரிகாரம் : 
மாற்றுத் திறனாளிகளுக்கு உணவுகள் மற்றும் ஆடைகள் வழங்குவதன் மூலம் கஷ்டங்கள் நீங்கி மனதிற்கு சந்தோசமான
மன நிலை உண்டாகும்.


 கடகம்

புனர்பூசம்-4,பூசம்-1,2,3,4, ஆயில்யம்-1,2,3,4 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் ஹ,ஹி,ஹீ,ஹே,க,கை,கொ,கௌ,டி,டு,டே,டோ ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்டவர்களுமான கடக ராசி அன்பர்களே!
நீர்நிலைகளுக்கு அருகாமையில் வசிக்க
கூடியவா்களும் பிரயாணங்கள் செய்வதில் விருப்பம் உடையவர்களுமான கடக ராசி நேயர்களே... சுறுசுறுப்பா௧ செயல்படும் நிலையும் 
பேச்சு சாதுர்யமும் அதிகாரம் செய்யும் மனப்பான்மையும் 
உண்டாகும்.வருமானத்திற்கேற்ற செலவுகளும் 
ஏற்பட்டு கையிருப்பு கரையும்.கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் முயற்சியின் மூலம்  நல்ல பலன்கள் கிடைக்கும்.காரியங்கள் தாமதமானாலும் வாரத்தில் இறுதியில் வெற்றி கிடைக்கும். தன்னுடன் பணியாற்றுபவர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகாமல் கவனமாக செயல்பட வேண்டும்.தைரியம் துணிச்சல் குறைந்து
சிந்தனைக் குழப்பங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு
தியானம் செய்வது தக்க நன்மையை தரும்.கண் தொடர்பான மருத்துவ செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் கடுமையான சொற்களை பயன்படுத்தாமல்
இருப்பது நன்மை உண்டாகும். தீய பழக்கங்களுக்கு
அடிமையாகாமல் கவனமாக செயல்பட வேண்டும்.திருமண முயற்சிகளுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
தொழில் முயற்சிகளில் ஆரம்பத்தில் தடைகள்
இருந்தாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். பகை வெல்லும் நிலையும், கடன்கள் கட்டி முடித்து நிம்மதி
பெறும் காலம் உண்டாகும்.
பரிகாரம் :
அன்னதானம் வழங்கும் மடங்களுக்கு
அரிசி வழங்குவதன் மூலம், தடைகள்
விலகி நினைத்த காரியம் நிறைவேறும்.


 சிம்மம் 
மகம்-1,2,3,4, பூரம்-1,2,3,4, உத்திரம்-1 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் ம,மி,மு,மை,மே,மோ,டி,டு,மா,மீ,மௌ,டே ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்டவர்களுமான சிம்ம ராசி அன்பர்களே!
திட்டமிட்டபடி காரியத்தை செய்து முடிக்கும் திறமையும்
அதிகார மனப்பான்மையும் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே! தன்னுடைய பணிகளில்
மற்றவர்களின் தலையீடு உண்டாகாமல் இருக்கவும்,வருமானத்திற்கு அதிகமான செலவுகளை கட்டுபடுத்தவும்
கவனமாக செயல்பட வேண்டும்.குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம்
தேவையற்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். தாயாரின் 
உடல் நலத்தில் கவனமும் வண்டி
வாகனங்கள் கால்நடைகள் பராமரிப்பு செய்வதில்
அக்கறையுடன் செயல்படுவதன் மூலம் தேவையற்ற வீண் விரையங்களை தவிர்க்கலாம்.கடன்கள்
அடைபடும்.சந்திராஷ்டம தின நாட்களில் கவனமாக இருப்பது நன்மையைத் தரும். திருமண முயற்சிகள்
பேச்சு வார்த்தை மூலம் நல்ல செய்தி வந்து சேரும். தொழிலில் இருந்து வந்த விரையங்கள் குறைந்து
முன்னேற்றம், வளர்ச்சி ஏற்படும்.குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
புதிய சொத்து மற்றும் வாகனச் சேர்க்கை ஏற்படும்.ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் சேமிப்பை
அதிகப்படுத்தலாம். தயக்கங்களை விட்டு தன்னம்பிக்கையுடன்
செயல்பட்டால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். பரிகாரம் சிவன் ஆலய வழிபாடு செய்வதும் 
ஆலயங்களை சுற்றி உள்ள இடங்களில்
மரம்,செடிகளை நட்டு பராமரிக்க உதவி
செய்வதன் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.

 கன்னி 

உத்திரம்-2,3,4,அஸ்தம்-1,2,3,4,சித்திரை-1,2 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் டோ,ப,பி,டோ,பீ,பூ,உருபூ,பே ஆகிய பெயர் எழுத்த்க்களைக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே! சரளமான பேச்சு திறமையும், இதிகாசங்களை அலசி ஆராயும் வல்லமையும் பெற்ற கன்னி ராசி நேயர்களே! உங்களைத் தேடி செல்வம் வந்து சேரும்.தேவைக்கேற்ற உதவிகள் வேண்டிய
நேரத்தில் கிடைக்கப் பெறுவீர்கள். பல்வேறு
பணிகளை செய்வதன் மூலம் வருமானம்
வந்தடையும்.கௌரவம் அந்தஸ்து உயரும். சொத்து கால்நடைகள் வாங்குவதன் மூலம் செலவுகள் அதிகரிக்கும் குழந்தைகள் வழி எதிர்பார்ப்புகள்,தாமதமாகும்.பூர்வீக சொத்துகளில் செலவும், பாட்டன்,பாட்டி வகையறாக்களுக்கான மருத்துவச் செலவுகளும் உண்டாகும்.தடைபட்டு வந்த திருமணங்கள் கைகூடி வரும். தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிப்புகள் குறையும்.
வார கடைசியில் உள்ள சந்திராஷ்டம நாட்களில்
கவனமும் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது மிகுந்த நன்மையை ஏற்படுத்தும்.ஒரு சிலர் பெற்றோர்களை விட்டு பிரிந்து சென்று ,புதிய இடங்களில் வசிக்க
நேரிடும்.சொத்துக்களில் உள்ள கடன்கள் மற்றும் பிரச்சனைகள் விரைவில் நல்ல முடிவுக்கு வரும்.
 பரிகாரம் :
பள்ளி குழந்தைக்கு நோட்டு,புத்தகம்
பேனா பென்சில் போன்ற பொருட்கள் கொடுப்பதன் மூலம் அறிவாற்றலும், மகிழ்ச்சியான
மன நிலையும் உண்டாகும். 


 துலாம் 

சித்திரை-3,4, சுவாதி-1,2,3,4, விசாகம்-1,2,3 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் ர,ரி,பை,பௌ,ரு,ரே,ரோ,த,தா,தி,தே ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்டவர்களுமான துலாம்ராசி அன்பர்களே!நவீன கருவிகளை வாங்குவதில் ஆர்வம்
கொண்டவர்களும்,தான் கற்ற கலையில் நிபுணராகவும் விளங்கும் துலாம் ராசி நேயர்களே!நிலம்,வீடு,வண்டி,வாகனம்,கால்நடைகள்
போன்றவை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் ஆடை, ஆபரணம் போன்ற அணிகலன்
சேர்க்கை ஏற்படும். இசையில் ஆர்வம் உண்டு.சாஸ்திர ஞானம் உண்டாகும். புத்திரம் தொடர்பான
தடைகள் நிவர்த்தி ஆகும். இடமாற்றங்கள்
ஏற்படும்.தாயின் உடல்நலத்தில் முன்னேற்றம் உண்டு . கல்வியில் உள்ள தடைகள் நீங்க அரச மரத்துப் பிள்ளையாரை வழிபாடு செய்வது
நிவர்த்தியாகும்.பயிர்க்கடன் வீடுகட்டும் கடன்
போன்றவை வாங்கும் வாய்ப்புகள் உருவாகும்.
கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.திருமணம்
தொடர்பான நல்ல செய்திகள் மகிழ்ச்சி கொடுக்கும்.தொழில் முயற்சிகள் வெற்றி தரும். வெளியூர்
பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழிலை விரிவுபடுத்துவதற்கான
செலவுகள் உண்டாகும்.
நண்பர்கள் மூலம் வீண் விரையச் செலவுகளும் அவர்களால் அலைச்சலும் உண்டாகும். ஆகையால்
தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
 பரிகாரம் :
பெருமாள் கோயில் வழிபாடு மற்றும்
பழவகையான இனிப்பு வகைகள் பிரசாதமாக
வழங்குவதன் மூலம் தடைகள் விலகும்.


 விருச்சிகம் 
விசாகம்-4, அனுசம்-1,2,3,4, கேட்டை-1,2,3,4 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் தோ,ந,நி,நா,நீ,நு,நே,நோ,ய,யு,நை ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்டவர்களுமான விருச்சிக ராசி அன்பர்களே! முன் யோசனைக்கு முக்கியத்துவம் தராதவர்களும் மனதில் தோன்றுவதை செயல்படுத்துவதில் ஆர்வமும் கொண்டவர்களுமான விருச்சிக ராசி நேயர்களே!தங்களின் உடல் நலம், ஆரோக்கியம் மேம்படும்.வருமானங்கள் அதிகரிக்கும்.சொத்து சேர்க்கை,வாகனச் சேர்க்கை உண்டு.மன தைரியம் அவ்வப்போது குறைந்தாலும் எடுத்த காரியத்தை தைரியமாக
செய்து முடிக்கும் சூழ்நிலை அமையும்.
தொழிலில் முதலீடு செய்து முன்னேற்றம் காண்பீர்கள்.புதிய தொழில் தொடங்கும் எண்ணங்கள் வெற்றி பெறும்.தொழில்முறைப் பயணங்களால் ஆதாயம் உண்டு. தந்தையின் முன்னேற்றத்தில்
தாமதம் ஏற்படும்.பூர்வீக சொத்து கிடைப்பதில் தடைகள் உண்டு. குலதெய்வ வழிபாடு செய்வது சிறப்பைத் தரும்.காரியத்தடைகள் அலைச்சல் இருந்தாலும் சாதனைகள் தொடரும். நோய் நொடிகள் குணமாகும்.சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்களால் உதவிகள் கடைக்கும்.
கல்வியில் முன்னேற்றம் உண்டு.திருமண
முயற்சிகளுக்கான வாய்ப்புகள் வந்து கதவை தட்டும். கணவன்,மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.
 பரிகாரம் :
ஊரின் எல்லை தெய்வங்களை வழிபடுதல் மற்றும் பொங்கல் படையலிட்டு பிரசாதம் வழங்குதல் மூலம் நன்மைகள் அதிகம் கிடைக்கும்.


 தனுசு 
மூலம்-1,2,3,4,பூராடம்-1,2,3,4, உத்திராடம்-1 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் யே,யோ,ப,பி,பு,பூ,த,ப,ட,பே ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்டவர்களுமான தனுசு ராசி நேயர்களே!
சாஸ்திரம் கற்பதில் ஈடுபாடும்,பெருந்தன்மைக்கு பெயர் பெற்றவர்களுமான தனுசு ராசி நேயர்களே!
உடல் நலம், ஆரோக்கியம் மேம்படும்.கல்வி,வருமானம் போன்றவற்றில் உள்ள தடைகள்
படிப்படியாக விலகும். வருமானங்களுக்கு
மேல் செலவுகள்  அதிகமாகும்.பூர்வீகத்தை விட்டு புதிய இடங்களுக்கு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும்
கண் தொடபான கண்ணாடி அணியும் சூழல் உண்டாகும். மற்றவர்களுக்கு மதிப்பளித்து அனுசரித்து செல்வதன் மூலம் அவர்களினுடைய வெறுப்பிற்கு ஆளாகாமல் தப்பிக்கலாம். அரசுவழி ஆதாயம் தடைபடும். தொழிலில் அலைச்சல், இடமாற்றம்,தேவையற்ற விரையங்கள் தவிர்க்க கவனமாக செயல்படுவது முன்னேற்றத்தை தரும். பகை வெல்லும் திறன் உண்டு.கல்வியில் எதிர்பார்த்த வாய்ப்புகள் தாமதமாகும். திருமண முயற்சிக்கான பலன்கள் தடைபடாமல் இருக்க குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.
சொத்துக்கள் மாற்றி அமைக்கவும், விற்பனை
செய்வதற்கான முயற்சிகள் வெற்றி பெறும்.பூர்வீக சொத்தின் மூலம்
ஆதாயம் உண்டு. தொழிலில் கவனமாக
செயல்படுவதன் மூலம் கஷ்டங்களை தவிர்க்கலாம்.
 பரிகாரம் -
ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கு
உணவு தானம் மற்றும் ஆடைகள் தானம் கொடுப்பதன் மூலம் மனநிறைவு உண்டாகும்.


 மகரம் 
உத்திராடம்-1,2,3,4, அவிட்டம்-1,2,திருவோணம்-1,2,3,4 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் ஜ,ஜா,ஜி,ஜே,ஜோ,க,கா,கீ ஆகிய பெயர் எழுத்துக்களை கொண்ட மகர ராசி அன்பர்களே!
சிக்கனமானவர்களும், காரியவாதிகளும்,தான்கொண்ட கொள்கையில் பிடிவாதம் உள்ளவர்களும்,விசித்திரமான சிந்தனை கொண்டவர்களுமான  மகர ராசி நேயர்களே! உடல்நலனில் அக்கரையும்,ஆரோக்கியத்தில் கவனமும் தேவை. வருமானங்கள்
தடையில்லாமல் கிடைக்கும். கல்வி தொடர்பான முயற்சிகள்  வெற்றி தரும். குடும்பத்தில் ஒற்றுமை,
மகிழ்ச்சி உண்டாகும். சகோதர உதவி, ஆதரவு
அதிகரிக்கும். சொத்து வண்டி, வாகனங்கள்
மற்றும் கால்நடைகள் மூலம் அதிகரிக்கும். சொத்து விற்பனைக்காக முயற்சிகள் கைகூடி வரும்.பூர்வீகத்தை விட்டு இடமாற்றம் செய்யும் சூழல் உருவாகும்.கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை 
தவிர்க்கலாம். தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நல்ல பலன் தரும். தொழில் முயற்சிகள் தாமதாகும்.புதிய தொழில் தொடங்குவதை தவிர்பது நல்லது.
சேமிப்புகள் கரையும், தேவையற்ற செலவுகளை குறைப்பது நன்மை உண்டாகும்.பணிச்சுமை
அதிகமாகும். ஜென்ம சனியின் பாதிப்புகள் குறைய சனிபகவான் வழிபாடு மிகுந்த நன்மையை தரும்.
 பரிகாரம் 
முதியோர் இல்லங்களுக்கு உணவு தானம் மற்றும் ஆடைகள் தானம் கொடுப்பதால் மன நிம்மதியும்,சந்தோசமும் ஏற்படும்.


 கும்பம்
அவிட்டம்-3,4, சதயம்-1,2,3,4,பூரட்டாதி-1,2,3 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் கு,கூ,ஞ,ஞா,கோ,கே,ஸ,ஸி,தோ,ந,தௌ,ஸே,ஸோ,த ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்டவர்களுமான கும்ப ராசி அன்பர்களே!
தன்மீது அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களும், முன் வைத்த காலை எச்சூழலிலும் பின் வைக்காமல் வெற்றியை நோக்கி செல்பவருகளுமான கும்பராசி நேயர்களே! சுறுசுறுப்பாகவும், மன தைரியத்துடனும் செயல்பட்டு வெற்றி பெறும் வாய்ப்புகள் உண்டாகும். உடல்நலம், ஆரோக்கியம் மேம்படும். சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். தாயாரின் உடல் நலம் சீராகும். கேட்ட இடத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். கல்வியில் முன்னேற்றங்கள் உண்டு. திருமண முயற்சி வெற்றி பெறும். துணைவரின் பிடிவாத குணத்தால் ஒரு சில பிரச்சனைகள் வந்து போகும். பயணங்களில் கவனம் தேவை. தொழில் முயற்சிகள் நல்ல பலனை தரும். மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். கௌரவம், அந்தஸ்து உயரும். பணத் தட்டுப்பாடுகள் இருந்தாலும், அவற்றை சமாளிக்கும் தைரியம் உண்டாகும். குடும்ப வழி சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வது நன்மை தரும். தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் அதிகரிக்கும்.
பரிகாரம் 
குலதெய்வ கோவிலுக்கு பசு தானம் மற்றும் கோவில் வளர்ச்சிக்கு உதவிகள் செய்வதனால் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.


 மீனம்
பூரட்டாதி -4, உத்திரட்டாதி-1,2,3,4, ரேவதி-1,2,3,4 ஆகிய நட்சத்திர பாதங்களைக் கொண்டவர்களும் தா,தீ,து,நோ,நௌ,ஞ,ஞா,தே,தோ,சா,சி,சீ ஆகிய பெயர் எழுத்துக்களைக் கொண்டவர்களுமான மீன ராசி அன்பர்களே! 
புத்திசாலித்தனமும், கூர்மையான நுண்ணறிவும், நிர்வாகத் திறமையும் கொண்ட மீன ராசி நேயர்களே!செல்வங்கள் பல வழிகளில் செலவாகும். அதை சுப செலவாக மாற்றிக் கொள்வதன் மூலம் சொத்து சேர்க்கை உண்டாகும். திருமண வயதில் உள்ளவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்வது நன்மை உண்டாகும். சாதுரியமான பேச்சின் மூலம் காரியங்கள் நிறைவேற்றிக் கொள்ளும் திறமை உண்டு. வங்கி கடன்கள் பெறுவதன் மூலம், செலவுகளை கட்டுப்படுத்த முடியும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை உண்டாகும்.சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகளை சிறிது காலம் தள்ளிப் போடுவது நன்மை உண்டாகும். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. தந்தையுடன் உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். தந்தையின் உடல்நலம்,ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு.தொழிலில் அலைச்சல் அதிகமானாலும் முன்னேற்றம் வளர்ச்சி உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் எண்ணத்தையும், முதலீடு செய்யும் நிலையையும் சரியான திட்டமிடுதல் மூலம் நன்மையை அடையலாம்.
 பரிகாரம் 
ஆதரவற்ற நிலையில் சாலைகளில் மற்றும் பஸ் நிலையங்களில் உள்ளவர்களுக்கு பொருட்கள் தானம் செய்வதால் மனதிற்கு மற்ற மகிழ்ச்சி உண்டாகும்.
 

ஸ்ரீ சிவ பெருமான் துதி பாடல்கள் 

திருமண தடை நீங்க உதவும் பாடல் - 
" சடையாய் எனுமால் சரண்நீ எனுமால் 
  விடையாய் எனுமால் வெருவா விழுமால் 
மடையாய் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள் உள்மெலிவே " 
 குழந்தை செல்வம் பெற உதவும் பாடல் - 
" பேய் அடையா பிரிவு எய்தும் பிள்ளையினோடு  உள்ள நினைவு ஆயினவே வரம் பெறுவர் ஐயுற வேண்டா ஒன்றும் வேயனதோள் உமைபங்கள் வெண்காட்டு மூக்குளநீர் தோய் வினையார் அவர் தம்மைத் தோயவாம் தீவினையே "
 தொழில் மற்றும் உத்தியோகம் 
 அமையும் காலங்கள் 
ஜெனன ஜாதகத்தில் லக்ன அதிபதியும் தொழில் காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவானும் பத்தாம் பாவக அதிபதியும் பலம் பெற்று
இருந்தால்  நல்ல முறையில் தொழில் அமையும் மேற்காணும் பாவக அதிபதிகள் பலம் இழந்து இருந்தால் தொழில் அமைவதில் தடங்கள் ஏற்படும்
பின்வரும் திசா/புத்திகளில் தொழில் அமையும் .
1- பத்தக பாவக அதிபதியும் திசா/புத்தி நடைபெறும் போது 
லக்ன அதிபதி பலம் பெற்று திசா/புத்தி நடைபெறும் காலம் 
2.பத்தாம் அதிபதி காரத்தில் உள்ள கிரகத்தின் திசா/புத்திகளில் 
3.நான்காம் பாகத்தில் உள்ள கிரகத்தின்  திசா/புத்திகளில் 
செவ்வாய் லக்னத்திற்கு மூனில் இருந்தும் ஏழில் இருந்தும் திசா/புத்தி நடைபெறும் போது 
குரு லக்னத்திற்கு இரண்டு மற்றும் ஆறாம் பாகத்தில் இருந்து திசா/புத்தி 
நடைபெறும் போதும் தொழில் அமையும் .