ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஏழை மக்களின் குடிசைகள் இடிப்பு , விடியல் அரசின் அலங்கோலம் - ஏழை மக்கள் கண்ணீர் !

ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஏழை மக்களின் குடிசைகள் இடிப்பு , விடியல் அரசின் அலங்கோலம் - ஏழை மக்கள் கண்ணீர் !

சென்னை; ஜூலை 31, சென்னை அரும்பாக்கத்தில் வசிக்கும் பூர்வகுடிகளைச் சொந்த நிலத்தைவிட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றும் கொடுங்கோன்மையை ஆளும் திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ,

" சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இராதாகிருட்டிணன் நகரில், கடந்த 30 வருடத்திற்கும் மேலாக வசித்து வரும் ஆதித்தமிழ்க்குடிகளின் வீடுகளை அதிகாரத்தின் துணைகொண்டு இடித்துத் தரைமட்டமாக்கி, அவர்களை ஒட்டுமொத்தமாக அங்கிருந்து வெளியேற்றும் ஆளும் திமுக அரசின் கொடுஞ்செயல் அதிர்ச்சியளிக்கிறதுபல்வேறு கட்சியினர் மக்களை வஞ்சிக்கின்ற திமுக அரசுக்கு  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.